கூட்டாஞ்சோறு: வாரிசுகளின் ஜோடி

கூட்டாஞ்சோறு: வாரிசுகளின் ஜோடி
Updated on
2 min read

மோகன்லாலின் திரையுலகப் பயணத்தில் இயக்குநர் ப்ரியதர்ஷனுக்கு பிரத்யேகப் பங்கு உண்டு. தற்போது ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி, மோகன் லாலின் மகன் ப்ரணவ் ஆகிய இருவருமே நடிக்க வந்துவிட்டார்கள். ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் அதை சாத்தியமாக்கித் தந்திருக்கிறார் நடிகர், இயக்குநர் சீனிவாசனின் வாரிசான வினீத் சீனிவாசன். இவர் இயக்கும் ‘ஹ்ரிதயம்’ படத்தில் ப்ரணவ்- கல்யாணி இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

போராளி ரன்வீர்

பாலிவுட்டை சமீபத்தில் கலங்கடித்த ‘ஃபர்ஸ்ட் லூக்’ போஸ்டர் ஆமிர் கான் நடிக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தினுடையது. தற்போது ரன்வீர் சிங் நடிக்கும் ‘ஜெயேஷ்பாய் ஜோர்டார்’ (Jayeshbhai Jordaar) படத்தின் முதல் பார்வைக்கு ஏக வரவேற்பு.

அதற்கான காரணமும் இல்லாமல் இல்லை. பாலிவுட்டின் முன்னணித் தாயரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் முதல் முறையாக நடிப்பது, அதுவும் அறிமுக இயக்குநர் திவ்யங் தாக்கர் எழுத்து இயக்கத்தில் நடிக்கும் அளவுக்கு அப்படியென்ன கதை என்று துருவத் தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப “திரைக்கதை செய்த மாயம்தான் என்னை இப்படியொரு சாதாரண மனிதனின் வேடத்தை ஏற்க வைத்தது” என்று கூறியிருக்கிறார். குஜராத்தி பெண்களுக்காகப் போராடும், ஒரு சாதாரண ஆனால் அசாதாரண சூழலில் சிக்கும் மக்கள் நாயகனின் கதையாம் இந்த ‘ஜெயேஷ்பாய் ஜோர்டார்’.

மீண்டும் கூட்டணி!

நல்ல கதை, வேகமெடுக்கும் திரைக்கதை, சமூகத்துக்குத் தீங்கிழைக்காத சாகச நாயகன் கதாபாத்திரங்கள் என்று தெலுங்குப்பட உலகில் பயணித்து வருபவர் நானி. சிவா நிர்வானா இயக்கத்தில் நானி நடித்து வெளியான படம் 'நின்னுக் கோரி' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து அதே இயக்குநரின் படத்தில் மீண்டும் நடிக்கிறார் நானி. 'டக் ஜெகதீஷ்' என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நானியின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in