சூழல் ஒன்று பார்வை இரண்டு: எண்ணமே காட்சியாய் வந்ததோ?

சூழல் ஒன்று பார்வை இரண்டு: எண்ணமே காட்சியாய் வந்ததோ?
Updated on
2 min read

அன்றாடச் சொல்வழக்காக நம்மிடையே சில பதங்கள் புழக்கத்தில் உள்ளன. திரைப்பாடல்களின் தொடக்க வரிகளாக எழுதப்படும்பொழுது அவை மிகவும் விரும்பி வரவேற்கப்படுகின்றன.

‘நினைத்தேன் வந்தாய் உனக்கு நூறு வயது’ என்று தமிழ்த் திரைக் காதலன் பாடும் அதே சூழலின் மறு பார்வையாக, நம் மனதின் நினைவை அழகாக வெளிப்படுத்தும் விதம் நீ விளங்குகிறாய் என இந்திப் பட காதலன் பாடும் இரு பாடல்களை பார்ப்போம்.

இந்திப் பாடல்

திரைப்படம்: பதிதா (கணவன்)

பாடகர்கள்: ஹேமந்த்குமார் லதா மங்கேஷ்கர். இசை: சங்கர் ஜெய்கிஷன்.

பாடலாசிரியர்: ஹஸ்ரத் ஜெய்பூரி

யாத் கியா தில்னே கஹா ஹோ தும்

ஜூம்த்தி பஹார் ஹை கஹா ஹோ தும்

பியார் ஸே புகார் லோ ஜஹா ஹோ தும்

யாத் கியா தில்னே கஹா ஹோ தும்

ஓ கோ ரஹே ஹோ கிஸ் கயால் மே

ஓ தில் ஃபஸாஹை பேபஸ்ஸி கி ஜால் மே

பொருள்:

உள்ளத்தில் தோன்றும் நினைவின் உருவகம் நீ

ஒளிரும் தென்றலின் எழில் வெளிப்பாடு நீ

விளிக்கும் காதலின் விழிப்புணர்வு நீ

உள்ளத்தில் தோன்றும் நினைவின் உருவகம் நீ

ஏய், எந்த நினைவில் உன் வசம் இழக்கிறாய்

நெஞ்சம் நிலை குலைந்தது நிலையற்ற எண்ண ஓடையில்

விளக்கங்கள் (நான் தேடும்) சூழ்ந்த எனக்கினிய காதலி நீ

ஓ இரவு கழிந்து இனிய காலை விடிந்துவிட்டது

ஓ உன் நினைவின் சுமையில் நிலை குலைந்தேன் நான்

இப்பொழுது எனது காவியம் நீயே

ஓ என் வாழ்வின் ஒரு அங்கம் நீ

ஓ என் பாதையில் தெரியும் ஒளி விளக்கு நீ

எனக்காக இருக்கும் உயர் வானம் நீ

உள்ளத்தில் தோன்றும் நினைவின் உருவகம் நீ

மனதில் தோன்றியதே வெளியில் காட்சியாக வந்தது என்று காதலியைப் பார்த்துப் பாடுகிறான் இந்திப் படக் காதலன். நான் நினைத்தேன் நீ வந்துவிட்டாய் எனத் தமிழ்ப் படக் காதலன் பூரிப்பதைக் கேளுங்கள்.

இனி தமிழ்ப் பாடல்

படம்: காவல்காரன். பாடகர்கள்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்.

இசை: எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர்: வாலி

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நூறு நிலாவை ஒரு நிலவாக்கிப் பாவை என்பேன்

ஆயிரம் மலரை ஒரு மலராக்கிப் பார்வை என்பேன்

பன்னீராக மானாக நின்றாடவோ

சொல் தேனாக, பாலாகப் பண் பாடவோ

மாலை நேரம் வந்துறவாடவோ

நிலைக் கண்ணாடிக் கன்னம் கண்டு ஆஹா..

மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஒஹோ.

அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா

அன்புத் தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா

மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் பிள்ளை

அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை

உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்

உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

இடை நூலாடி செல்லச் செல்ல ஆஹா

அதை மேலாடை மூடிக்கொள்ள ஒஹோ

சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன

சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன

சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய் ஆசை மனது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in