உதயநிதி படம் சம்மதிப்பாரா சமந்தா?

உதயநிதி படம் சம்மதிப்பாரா சமந்தா?
Updated on
1 min read

கோலிவுட் என்றாலே அலர்ஜி வந்த மாதிரி ஓடி ஒளிந்த சமந்தாவா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. மலையாள சினிமாவில் ஆரம்பித்து பெங்கால் சினிமா வரை பிரபலமாக இருக்கும் ஹீரோயின்களைத் தங்கள் பிராண்ட் சோப்புக்கான விளம்பரத்தில் நடிக்க வைத்துவிடுவது அந்த நிறுவனத்துக்குக் கை வந்த கலை. அந்த சோப் நிறுவனம் சமந்தாவைப் பிடித்தது. ஆனால் அந்த விளம்பரத்தில் எனது சித்தார்த்தும் என்னுடன் நடிப்பார் என்று நிபந்தனை விதிக்கும் அளவுக்கு அவர்களிடையே காதல் ஆழமாக வேர்விட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. முதலில் தெலுங்குத் திரையுலகில் இருந்து சித்தார்த் மெல்ல விலகி வந்து தமிழில் தனக்கான இடத்தை உருவாக்கிவரும் நிலையில், காதலர் வழியையே சமந்தாவும் பின்பற்றுவதாகக் கூறுகிறார்கள்.

முதலில் விஜய்யுடன் ‘கத்தி’ படத்தில் ஜோடி சேர்ந்த சமந்தா, அடுத்து சூர்யாவுடன் ‘அஞ்சான்’படத்தில் அடைக்கலமானார். தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துவிட்டார். சீனியர் ஹீரோ விக்ரமுக்கே கால்ஷீட் கொடுத்துருக்கீங்க, எனக்குத் தர மாட்டீங்களா என்று சமந்தாவின் கால்ஷீட்டைக் கேட்டிருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின். அவர்தற்போது நடித்துவரும் ‘நண்பேண்டா’ படத்தைத் தொடர்ந்து ‘என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கவே சமந்தாவின் கால்ஷீட்டைக் கேட்டிருக்கிறாரார்களாம். உதயநிதியின் கோரிக்கைக்கு சமந்தா சம்மதிப்பாரா என்பதுதான் கோலிவுட்டில் பல காதுகளைக் குடையும் கேள்வியாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in