

சொந்தக்காலில் நிற்கத் தொடங்கிய பிறகு வெற்றிபெறும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கில்லாடி ஆகிவிட்டார் அஞ்சலி. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்திக்கொண்டே தமிழில் விட்ட இடத்தைப் பிடிப்பதில் தீவிரம் காட்டுகிறார். தமிழில் விஷால் ஜோடியாக நடித்த ’மத கஜ ராஜா’ இன்னும் வெளியாகவிட்டாலும் ‘அப்பாடக்கர்’, ‘மாப்ள சிங்கம்’, கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ ஆகிய மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தான் நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் கடமை உணர்வுடன் வந்துவிடுகிறார். பயணங்களின்போது ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிவது தனக்கு வசதியாக இருப்பதாகக் கூறும் அஞ்சலி, பாவாடை தாவணி, புடவை, சல்வார் ஆகிய ஆடைகளை அணியும் கதாபாத்திரங்களே அதிகமும் கிடைப்பதாகக் கூறுகிறார். “பாவாடை தாவணி உங்களுக்கு அழகு என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்தால் பிடிக்கும். ஆனால், நிஜத்தில் பாவாடை தாவணி அணியப் பிடிக்காது” என்கிறார். திரை நிகழ்ச்சிகளுக்கு ஃபுல் ஸ்லீவ் சல்வார் மற்றும் டிசைனர் ஷிபான் புடவைகளில் வர விரும்பும் அஞ்சலிக்கு ஆடைகளை வடிவமைக்கவும் சல்வார்களில் எம்ராய்டரி செய்யவும் தெரியும்.