ஆன்லைன் அதிபர்

ஆன்லைன் அதிபர்
Updated on
1 min read

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார் தமன்னா. இன்னொரு பக்கம் எம். ராஜேஷ் இயக்கிவரும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படத்தில் முதல்முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துவருகிறார்.

இதைவிட முக்கியமான செய்தி தமன்னா தற்போது ஆன்லைன் தொழிலதிபர் ஆகியிருப்பதுதான். அடிப்படையில் வைர வியாபாரியான தன் அப்பா சந்தோஷ் பாட்டியாவுடன் இணைந்து இணையம் வழியாக வைர நகைகளை விற்கும் நிறுவனமொன்றைத் தொடங்கியிருக்கிறார்.

நகைகளை வடிவமைக்கும் ஆர்வம் கொண்ட தமன்னாவுக்கு ஆடைகளையும் வடிவமைக்கத் தெரியும். மில்க் ஒயிட் ஏஞ்சல் என்று ஆந்திர ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் திரை மற்றும் வியாபாரத் தலங்களின் தொடக்க விழாக்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்வதற்கு ஏற்பப் புடவை, டிசைனர் சல்வார்கள் மற்றும் த்ரிஃபோர்த் ஃப்ராக்குகள் அணிந்து வருவார்.

சல்வார்கள் என்றால் சிங்கிள் சைட் துப்பட்டா அணிந்து சல்வார் டிசைனுக்கு ஏற்பக் கையில் மணிபர்ஸ் ஏந்திக்கொள்வார். ஃப்ராக் அணிந்தால் மணிபர்ஸ் தவிர்த்து ஹைஹீல்ஸ் காலணியில் வருவார். தனது நீளமான கழுத்தின் அழகு பார்ப்போரைக் கவரும் வண்ணம் அவரே டிசைன் செய்த கழுத்தணிகளை அணிந்துவர மறக்க மாட்டார்.

நவீன ஆடைகளோ புடவையோ அடிக்கடி தலையை ப்ளீச் செய்துகொள்வதிலும் ஃப்ரி ஹேர் விடுவதிலும் அலாதிப் பிரியம் கொண்ட தமன்னாவுக்குப் பிடித்தமான வண்ணம் வெள்ளை. ஆனால் வெள்ளை வண்ணத்தில் ஆடைகள் அணிவது இவருக்குப் பிடிக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in