முக்கோணக் காதலுக்கு 300 கோடி!

முக்கோணக் காதலுக்கு 300 கோடி!
Updated on
1 min read

ஹாலிவுட் ஷோ

பதினெட்டாம் நூற்றாண்டு இங்கிலாந்து விக்டோரியன் ஏஜ் என்று வருணிக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் மதக் கட்டுப்பாடுகளால் மன இறுக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர் ஆங்கிலேயர்கள்.

ஜார்ஜ் எலியட், வில்லியம் வேர்ட்ஸ் வொர்த், தாமஸ் ஹார்டி போன்ற புகழ்பெற்ற ஆங்கில இயக்கிய ஆளுமைகள் ‘விக்டோரிய யதார்த்தவாத’ எழுத்து வகையில் எழுதிய ரொமாண்டிக் கவிதைகளும் நாவல்களும் மன இறுக்கத்தைக் குறைத்து வாழ்க்கை முறையை ரசனையாக மாற்றியதாகக் கூறுகிறார்கள் விமர்சகர்கள்.

ஹார்டி அன்றைய இங்கிலாந்தின் அமைதியான கிராமங்களைக் கதைக் களமாகக் கொண்டு எழுதிய நாவல்களில் ஒன்று ‘ஃபார் ஃப்ரம் தி மேட்னிங் கிரவுட்’. ஏற்கனவே இந்த நாவல் 1967-ல் திரைப்படமாகி வெற்றிபெற்றது. தற்போது பிரபல டேனிஷ் இயக்குநர் தாமஸ் விண்டர்பெர்க் இயக்கத்தில் மீண்டும் திரைப்படமாகியிருக்கிறது.

நிலவுடைமைச் சமுதாயமாக விளங்கிய மேற்கு இங்கிலாந்தின் கிராமம் ஒன்றில் வசிக்கிறாள் அழகே உருவான பெத்செபாள். பெரும் நிலப்பிரபுவின் வாரிசான இவளை மூன்று ஆண்கள் காதலிக்கிறார்கள். சமூக அந்தஸ்தில் வெவ்வேறு நிலைகளில் இருக்கும் மூவரும் அவளுக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதிக்கொள்கிறார்கள்.

பெத்செபாளை இறுதியில் யார் கரம் பற்றினார் என்பதுதான் இந்தக் காதல்-மரணப் போராட்டத்தின் கதை. ரூ.300 கோடி செலவழித்திருக்கிறார்களாம் இந்த முக்கோணக் காதல் கதைக்கு.

மே முதல் நாள் வெளியாகும் இந்தப் படத்துக்காகக் காத்திருக்கிறார்கள் ஐரோப்பிய ரசிகர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in