

இந்தியாவில் வெளியான நான்கு நாட்களில் 41.7 கோடி வசூலித்து ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் -2’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் ரிலீஸான பாலிவுட் படமான ‘கன்டே’ மூன்று நாட்களில் ரூ.38 கோடியை வசூலித்தது. ஏப்ரலில் வெளியான ‘2 ஸ்டேட்ஸ்’ திரைப்படம் வார முடிவில் 43.9 கோடி வசூலித்தது. இந்த படங்களின் வசூலை முறியடிக்கும் விதமாக ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’ திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.41.7 கோடியை வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள ‘அமேசிங் ஸ்பைடர் மேன் - 2’ நாடு முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகும் என்று படத்தை ரிலீஸ் செய்த சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.