மொழி பிரிக்காத உணர்வு: தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே!

மொழி பிரிக்காத உணர்வு: தூங்கும்போதும்  தூங்கவில்லை உன் ஞாபகமே!
Updated on
2 min read

சில திரைப் பாடல்களை கேட்கும்பொழுது அவை இடம் பெற்ற திரைப்பட காட்சிகளை மட்டுமின்றி அதன் தொடர்புடைய பல உணர்வு களை நமக்கு கிளர்த்தும் வண்ணம் விளங்குகின்றன. அவ்விதமான பாடல்களை இப்போது பார்ப்போம்.

முதலில் இந்திப் பாடல்.

திரைப்படம்: தோ பதன் (ஈருடல், இருவர்)

பாடலாசிரியர்: ஷக்கீல் பதாயீ.

பாடியவர்: ஆஷா போன்ஸ்லே. இசை: ரவி.

பாடல்:

ஜப் சலீ தண்டி ஹவா ஜப் உட்டீ காலி கட்டா

முஜ்கோ யே ஜானே யேவஃபா தும்யாத் ஆயே

ஜிந்தகீ கீ தாஸ்த்தான் சாஹேன்

கித்னீ ஹோ ஹஸீ பின் துமாரே குச் நஹீன்

க்யா மஜா ஆத்தா சனம் ஆஜ் பூலே ஸே கஹீன்

தும் பீ ஆஜாத்தே யஹீன்

--

--

பொருள்:

குளிர்ந்த காற்று வீசும் போதெல்லாம்

கரும் மேகம் எழும் போதெல்லாம்

எனக்கு அன்பே உன் ஞாபகம் வருகின்றது

என் வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சி எனினும்

உடன் நீ இல்லாமல் பயன் ஒன்றுமில்லை

எத்தனை இன்பமாய் இருக்கும்

எப்படியாவது நீயும் இங்கு வந்திருந்தால்

இந்த வசந்தம், இந்தச் சூழல் கண்டவுடன் என்

சிந்தை கவர்ந்தவனே உன் நினைவு வந்தது

அழகான இக்காட்சிகள், ஆகாயம் இளமை

இவை எல்லாம் பார்க்கும்போது

எனக்குத் தோன்றுகிறது

நீ அருகில்தான் இருப்பது போல

தோட்டம் - இதிலிருந்து தொலைந்தது வனப்பு

அலைபாய்கிறது என் உள்ளம்

அவன் குரலையே எப்பொழுதும் கேட்பதால்

என்றைய தினத்தை விடவும் இன்று உன் ஞாபகம்.

குளிர்ந்த காற்று வீசும் போதெல்லாம்

கரும் மேகம் எழும் போதெல்லாம்

எனக்கு அன்பே உன் ஞாபகம் வருகின்றது.

காதலன் அருகில் இல்லையே என்ற வருத்தத்தில் காதலி பாடும் இப்பாட்டின் ஏக்க உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக காதலன் தன் காதலியை மனதில் இருத்திப் பாடும் இந்தத் தமிழ்ப் பாடல் விளங்குகிறது.

திரைப்படம்: காலமெல்லாம் காதல் வாழ்க. பாடலாசிரியர்: பழனி பாரதி.

பாடியவர்: ஹரிஹரன். இசை: தேவா

பாடல்:

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்

போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே

தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ

தேடினால் விழி ஈரமாவது ஏனடியோ

வாசம் மட்டும் வீசு பூவே

வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா

தென்றல் போல எங்கும் உன்னை

தேடுகின்றேன் நான் தேடுகின்றேன்

தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து

கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து

சிந்தும் விழி நீரில் நானே

மூழ்குகின்றேன் நான் மூழ்குகின்றேன்

வீசிடும் புயல் காற்றிலே

நான் ஒற்றைச் சிறகானேன்

காதலின் சுடும் தீயில்

நான் எரியும் விறகானேன்

மேடைதோறும் பாடல் தந்த வான்மதியே

ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே

போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே

தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

உந்தன் முகம் பார்த்தவுடன் கண்ணிழந்து

போவதென்றால் கண் ரெண்டும் இழப்பேன்

இப்போதே நான் இப்போதே

உந்தன் முகம் பார்க்கும் முன்பே

நான் மறைந்து போவதென்றால்

கண்கள் மட்டும் அப்பொழுதும்

மூடாதே இமை மூடாதே

காதலே என் காதலே

எனை காணிக்கை தந்துவிட்டேன்

சோதனை இனித் தேவையா

கடும் மூச்சினில் வெந்துவிட்டேன்

காதல் என்னும் சாபம் தந்த தேவதையே

காணலாமோ ராகம் நின்று போவதையே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in