ஏ.ஆர். ரஹ்மானின் புதிய முகம்

ஏ.ஆர். ரஹ்மானின் புதிய முகம்
Updated on
1 min read

ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கையை மையமாக வைத்துத் தயாராகியிருக்கும் ‘ஜெய் ஹோ’ என்ற ஆவணப் படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

இதற்காக, நியூயார்க் நகருக்கு வந்திருந்த ரஹ்மான், செய்தியாளர்களிடம் பேசும்போது தனது புதிய முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“நான்கு மெலடிகள், ஒரு குத்துப் பாட்டு என இசையமைப்பது போரடித்து விட்டது. இதைத்தாண்டி, புதிதாகவும், சவாலாகவும் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவேதான், திரைக்கதை எழுதுவது, படங்கள் தயாரிப்பது போன்ற துறைகளில் கால் பதித்துள்ளேன்.

பாம்பே ட்ரீம்ஸ் என்ற இசை ஆல்பத்துக்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது, பிரிட்டனைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஆன்ட்ரூ லாய்ட் வெப்பர், “உங்களுக்குக் கதை, திரைக்கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளதா?” எனக் கேட்டார். ஒருநாள், நம்மால் ஏன் முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

அதற்கான தேடல்தான், தற்போது என்னைத் திரைக்கதை எழுத வைத்துள்ளது” என்று கூறித் தன் புதிய முகத்தைக் காட்டியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in