

இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா. (உலகத்தின் ஆபரணம் என்று அர்த்தம்) 1931 மார்ச் 14 அன்று வெளியானது. அது இந்தியில் பேசியது.
அர்தேஷிர் இரானி என்பவர் அவரது நிறுவன மான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி மூலம் இதைத் தயாரித்தார். இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
“பின்பற்றுவதற்கு எங்களுக்கு எந்த முன்மாதிரியும் அன்று இருக்கவில்லை, ஒலிப்பதிவு பற்றி ஒரு மாதம் பயிற்சி பெற்றோம், பார்ஸி நாடகமேடையிலிருந்து அதன் திரைக்கதையை அமைத்துக் கொண்டோம். வசன எழுத்தாளர் இல்லை. பாடல் ஆசிரியர் இல்லை.
ஒழுங்கற்ற கிறுக்கல்கள் மீது ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம். ஆரம்பித்தோம். நாடக மேடையில் பாடப்பட்டு வந்த பாடல்களை நானே தேர்ந்தெடுத்தேன். மெட்டுகளைத் தேடிப்பிடித்தேன், தபேலா, ஹார்மோனியம், வயலின் இந்த மூன்றும் தான் இசைக்கருவிகள்” என்றார் அர்தேஷிர் இரானி.
ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய பார்ஸி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட காதல் சினிமா இது. ஒரு இளவரசன் நாடோடிப்பெண்ணை காதலிப்பதாக அது இருந்தது. படம் வெளியான அன்று கூட்டம் சமாளிக்க முடியாததால் போலீஸாரின் பாதுகாப்பு கேட்டு வாங்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தின் படச்சுருள் தற்போது இல்லை. காணாமல் போய்விட்டது.
இரானி