படம் பேசும் - 12/03/2015

படம் பேசும் - 12/03/2015
Updated on
1 min read

இது நம்ம படம்

நயன்தாராவுடன் சிம்பு மீண்டும் ஜோடி சேர்ந்ததால்தான் ஹன்சிகாவுடனான அவரது காதல் முறிந்தது என்றார்கள். பரபரப்புடன் தொடங்கப்பட்ட ‘இது நம்ம ஆளு’ படம், சிம்புவின் சோகம், பணப்பிரச்சினை எனப் பாதியில் நின்றுவிட்டது என்று வெளியான செய்திகளைப் பொய்யாக்கித் தற்போது மீண்டும் ஒரே மூச்சில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். ”எனக்குக் குடும்ப ரசிகர்களைக் கொண்டுவரப்போகும் படம் இது. அதனால் இது நம்ம படம் என்று சிம்பு சிலிர்க்க ஆரம்பித்திருக்கிறார். இங்கே இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் நடிகர் ஜெய், ஆன்ட்ரியா, நயன்தாராவுடன் செல்பி எடுத்துககொள்கிறார் சிம்பு.

இளமை ரகசியம்

ஓவியர், நடிகர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் ஆகிய பன்முகங்களைத் தாண்டி சிவகுமாருக்குச் சிறப்பு சேர்ப்பது ’என்றும் மார்க்கண்டேயர்’ என்ற பட்டம். 73 வயதிலும் மாறாத இளமையுடன் தொடரும் அவரது தோற்ற ரகசியத்தின் பின்னால் இருப்பது ஒப்பனையல்ல.. யோகாசனம். இங்கே அவரது அதிகாலை யோகசனத்தைப் புகைப்படமெடுத்தவர் அவரது பேரனாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in