

காதலை உணர்ந்து அதில் ஈடுபாடு கொள்ளும்பொழுது மகிழ்ச்சியும் அமைதியும் தரும் மாயத்தைச் செய்கிறது. அதே காதலை இழக்கும்போது அது ஏற்படுத்தும் துன்பம் நிம்மதியைக் கெடுத்து நிலைகுலையச் செய்துவிடுகிறது.
அத்தருணங்களில் திரை நாயகர்கள் ‘என்னைத் தனியே விடு’ என்று மன்றாடும் மன உணர்வைத் துல்லியமாக வெளிப்படுத்தும் திரைப் பாடல்கள் கவித்துவ வரிகளால் மட்டுமின்றி பாடியவர்களின் உணர்ச்சி மிக்க குரல்களாலும் இசையாலும் அமரத்துவம் அடைந்தவை.
காதல் கைகூடாமல், காதலியை மறக்க முடியாத வேதனையின் குமுறலாக அமைந்த இந்திப் பாடலை முதலில் பார்ப்போம்.
படம். தில் பீ தேரே, ஹம் பீ தேரே(1960). மனதும் உன்னுடயது, நானும் உன்னுடையவன் என்பது இந்த தலைப்பின் பொருள். பாடலாசிரியர்: ஷமீம் ஜெய்பூரி. பாடியவர்: முகேஷ். இசை. கல்யாணந்த்ஜி ஆனந்த்ஜி
பாடல்.
முஜ்கோ இஸ் ராத் கி தன்ஹாயீ மே
ஆவாஜ் ந தோ ஆவாஜ் நா தோ
ஜிஸ்கீ ஆவாஜ் ருலா தே முஜ்ஜே
வோ சாஜ் ந தோ ஆவாஜ் ந தோ
ரோஷ்னி
ஹோ ந சக்கி
. . .
. . .
பொருள்.
இந்த இரவின் தனிமையில் (இருக்கும்) எனக்கு
சப்தம் (குரல்) வேண்டாம் (தராதே)
யாருடைய குரல் என்னை அழ வைத்ததோ
அந்தத் துணையைத் தராதே (வேண்டாம்)
ஒளியை உண்டாக்க முடியவில்லை
லட்சம் (தீபம்) ஏற்றியும் என்னால்
உன்னை மறக்கவே (முடிய) இல்லை
லட்சம் (பேரை) மறக்க முடிந்தும்
நொந்திருக்கிறேன்
என்னை மேலும் நோகடிக்காதே
நீ எனக்கு தினமும் கரையாக இருந்தாய்
(ஆனால் உன் பிரிவால்) யாரோ அலைபாய்வார்கள் என்பதை நீ நினைக்கவில்லை
மறைந்துவிட்டால் (எங்காவது)
என்னை நினைக்காதே
இந்தத் தனிமையின் ஆற்றாமையை அப்படியே வெளிப்படுத்தும் தமிழ்ப் பாடலைப் பாருங்கள்:
படம்: புதிய பறவை 1964.
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: டி. எம் . சௌந்தரராஜன்
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
(எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி)
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
ஹோ, இறைவன் கொடியவனே
(எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி)
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
ஓ, உறங்குவேன் தாயே
(எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி)