

சிறியவர் முதல் பெரியவர் வரை உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட காமிக் சூப்பர் ஹீரோ வரிசைப் படங்களில் ஸ்பைடர் மேனுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு.
மார்க் வெப் இயக்கியிருக்கும் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன்-2’ படத்தில் - ஸ்பைடர் மேனாக நடித்திருக்கிறார் ஆன்ட்ரூ கேர்பீல்ட். ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’ இரண்டாம் பாகம் படத்தில் ‘எலக்ட்ரோ’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜேமி பாக்ஸ்க்கு, தமிழ்த் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகரான சுப்பு பஞ்சு டப்பிங் பேசியுள்ளார். முதலில் கொஞ்சம் அப்பாவித்தனம், பிறகு வில்லத்தனம் எனக் கலவையாகப் பேசும் ‘எலக்ட்ரோ’ கதாபாத்திரத்திற்கு சுப்பு பஞ்சுவின் குரல் அவ்வளவு பொருத்தமாக அமைந்து விட்டது என்கிறார்கள். நியூயார்க் நகர மக்களுக்குச் சவாலாக இருக்கும் ‘எலக்ட்ரோ’ என்ற கதாபாத்திரத்தை, ஸ்பைடர்மேன் எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் நாயகனை விட வில்லன் பலம் வாய்ந்தவனாக இருப்பான். அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல என்கிறார்கள்.
ஸ்பைடர் மேன் வில்லனோடு மோதும் அதே நேரம் தனது காதலியுடன் ரொமான்ஸ் பண்ணவும் நேரமிருக்கும் அல்லவா? ஸ்பைடர் மேனின் காதலியாக எம்மா ஸ்டோன் நடித்திருக்கிறார். ஸ்பைடர் மேன் இளைஞர்களையும் விட்டு வைக்கமாட்டார் போலிருக்கிறது.