Last Updated : 09 Jan, 2015 01:01 PM

Published : 09 Jan 2015 01:01 PM
Last Updated : 09 Jan 2015 01:01 PM

மனிதனைப் பிசாசாக மாற்றிய காதல்

விஷம் என்பது தெரிந்தும் பலரும் விரும்பிப் பருகும் பானம் காதல். வைத்தியம் இல்லாத இந்தக் காதல் பைத்திய நோய் பிடித்த திரை கதாநாயக, நாயகிகள் அதன் மேன்மையையும் புனிதத்தையும் மட்டுமே பாடுவார்கள். காதலை நினைத்து வருந்தினாலும் அதைத் தீவிரமான விதத்தில் மட்டுமே செய்வார்கள்.

காதலைக் கிண்டலடிப்பதையும் காதல் ஏற்படுத்தும் சங்கடத்தை வைத்துக் காதலைப் பரிகசிப்பதையும் நகைச்சுவை நடிகர்களிடம் விட்டுவிடுவார்கள். இந்த மரபில் அமைந்த தமிழ், இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.

சஸ்ரால் (மாமியார் வீடு) படம் ராஜேந்திர குமார், (நம்மூர்) சரோஜாதேவி, இந்தி நாகேஷ் என்று அழைக்கப்பட்ட மெஹ்மூத், ஷோபா கோட்டே ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் இப்பாடலை எழுதியவர் ஹஸ்ரத் ஜெய்ப்பூரி. இசை சங்கர் ஜெய்கிஷன்.

பாடல்

ஜானா துமாரா பியார் மே

சைத்தான பன்கயா ஹூம்

கியா கியா பனானா சாஹா தா

பெய்மான் பன் கயா ஹூம்

ஹம் தோ திவானா ஹை தேரே நாம் கே

தில் லூட்டே பைட்டே ஹை ஜிகர் தாம் கே

இப்பாடலின் பொருள்:

தெரியுமா உன் காதலால் நான் ஒரு

சைத்தான் ஆகிவிட்டேன்

என்ன என்னவாகவோ ஆக விரும்பிய நான்

நேர்மையற்றவனாக ஆகிவிட்டேன்

நான் உன் மேல் பைத்தியமாக

மனம் நொந்து நிலை தடுமாறி

(தைரியம் குன்றி) உட்கார்ந்திருக்கிறேன்

காதல் என்னைச் செயலற்ற (சோம்பேறி)

மனிதனாக்கிவிட்டது.

(முன்பு) நானும் ஒரு செயல் வீரனாகவே இருந்தேன்.

இவ்வளவு வீழ்ச்சி அடைந்துவிட்டேன்

மனிதனிலிருந்து மிருகம் ஆகிவிட்டேன்

தற்போது ஒரு கல் சிலையாக அல்லது ஒரு பூதத்தின் தலைவன் எனப் (என்னைப்) புரிந்துகொள்

பாதங்களில் சுற்றிக்கொண்ட காதல் எனும்

பல தளைகளையுடைய சங்கிலியாகிவிட்டேன்

என் நிலைமையைப் பார்

கலக்கம் அடைந்துவிட்டேன்.

வழக்கத்துக்குச் சற்று மாறாக, தமிழ்த் திரை மரபுகளின்படி காதலை இந்த அளவுக்குச் சாடாமல் வேடிக்கையான விதத்தில் அமைந்திருந்தாலும் வெளிப்படும் உணர்வில் ஒன்றுபடுகிறது இந்தத் தமிழ் பாடல்.

படம்: வல்லவனுக்கு வல்லவன்

பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, டி.எம்.எஸ்

பாடலாசிரியர்: கண்ணதாசன்.

பாடல்:

பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்

தேடுதடி மலர் மஞ்சம்

சிரிப்புக்கு என்னடி பஞ்சம் (பாரடி)

பைத்தியமே கொஞ்சம் நில்லு

வைத்தியரிடம் போய்ச் சொல்லு

நெருங்காதே இது முள்ளு

தருவதை வாங்கிக் கொள்ளு (பைத்தியமே)

அடடா இது என்ன கண்ணா நீ

அந்தர லோகத்து பெண்ணா

உடையைப் பார்த்தவுடன் மனது பாதி கெட்டு

இடையைப் பார்த்தவுடன் இருந்த மீதி கெட்டு ...

ஆ மனிதனான என்னை மடையனாக்கிவிட்டு

மறைத்து மூடிவிட்டு முறைத்துப் பார்ப்பதென்ன…

ஆ உதட்டின் மீது ரெண்டு பழத்தை ஆடவிட்டு

ஆ உலக இன்பந்தன்னை உருகி ஓடவிட்டு…

ஆ துடிக்கும் ஏழை நெஞ்சை அடக்கித் தூங்க விட்டு

ஆ நடிப்பதென்ன.. கொஞ்சம் நடந்து வாடி சிட்டு

அடி வாடி என் சிட்டு

அழகுக்கு ஏனடி வஞ்சம்

அடைந்து விட்டோமடி தஞ்சம்

தேடுதடி மலர் மஞ்சம்

சிரிப்புக்கு என்னடி பஞ்சம் ஹேய் (பாரடி)

ஆசையைப் பாரடி தங்கம்- இவர்

அழகிலே ஆனா சிங்கம்

அறுபதாக இவர் அழகு தோன்றுதடி…

இருபதாக இவர் மனது மாறுதடி…

ஒருவராக வர வீரம் இல்லையடி…

ஆ இருவராக வந்து ஏய்க்கப் பார்க்குதடி…

ஆண்களாக இவர் தோன்றவில்லையடி…

ஆசைக்கேற்றபடி ஆளு இல்லையடி…

பெண்கள் கையில் தினம் பூசை வாங்குவதைப்

பெருமையாகக் கருதும் வீரரடி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x