இளவரசியாக உணர்கிறேன்

இளவரசியாக உணர்கிறேன்
Updated on
1 min read

சிம்புவுடனான காதல் சர்ச்சையைப் புறங்கையால் தட்டிவிட்டபடி 2014-ம் ஆண்டின் வசீகரக் கதாநாயகியாக முன்னே போய்க்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்ட ஹன்சிகா 2015-ம் ஆண்டிலும் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகியாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

அரண்மனை திரைப்படத்தின் அதிரடி வெற்றி அவரை இன்னும் உற்சாகமாகப் பேச வைத்திருக்கிறது “ தமிழ் சினிமாவில் எனக்கு முன்னணியான இடத்தை தந்துவிட்டது இந்தப் படம். என்னுடைய திறமை மேல் நம்பிக்கை வைத்து அந்த கேரக்டரைச் சுந்தர். சி எனக்குக் கொடுத்தார். நான் நன்றாக நடித்தேன் என்று ரசிகர்கள் சொல்லும்போது இன்னும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற தைரியம் வந்திருக்கிறது.

சுந்தர்.சி தொடர்ந்து அவரது படங்களில், வித்தியாசமான கேரக்டர்களை எனக்குக் கொடுத்து வருகிறார். பொங்கல் அன்று வெளிவரும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அடுத்த வாரம் வெளிவர இருக்கும் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி. அதன்பிறகு வெளியாக இருக்கும் ‘உயிரே’ படத்தில் என்னுடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இவற்றோடு நான் மிகவும் எதிர்பார்க்கும் ‘வாலு’ படமும் வெளியாவது உறுதியாகிவிட்டது இன்ப அதிர்ச்சி. இவை எல்லாவற்றையும்விட சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். படப்பிடிப்பிலும் என்னை ஓர் இளவரசியாகவே உணர வைக்கிறார்கள்” என்று உருகும் ஹன்சிகாவின் அடுத்த குறி அஜித்.

காதல் சர்ச்சையைப் புறங்கையால் தட்டிவிட்டபடி 2014-ம் ஆண்டின் வசீகரக் கதாநாயகியாக முன்னே போய்க்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்ட ஹன்சிகா 2015-ம் ஆண்டிலும் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகியாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

அரண்மனை திரைப்படத்தின் அதிரடி வெற்றி அவரை இன்னும் உற்சாகமாகப் பேச வைத்திருக்கிறது “ தமிழ் சினிமாவில் எனக்கு முன்னணியான இடத்தை தந்துவிட்டது இந்தப் படம். என்னுடைய திறமை மேல் நம்பிக்கை வைத்து அந்த கேரக்டரைச் சுந்தர். சி எனக்குக் கொடுத்தார். நான் நன்றாக நடித்தேன் என்று ரசிகர்கள் சொல்லும்போது இன்னும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற தைரியம் வந்திருக்கிறது. சுந்தர்.சி தொடர்ந்து அவரது படங்களில், வித்தியாசமான கேரக்டர்களை எனக்குக் கொடுத்து வருகிறார். பொங்கல் அன்று வெளிவரும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன்.

அடுத்த வாரம் வெளிவர இருக்கும் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி. அதன்பிறகு வெளியாக இருக்கும் ‘உயிரே’ படத்தில் என்னுடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இவற்றோடு நான் மிகவும் எதிர்பார்க்கும் ‘வாலு’ படமும் வெளியாவது உறுதியாகிவிட்டது இன்ப அதிர்ச்சி. இவை எல்லாவற்றையும்விட சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். படப்பிடிப்பிலும் என்னை ஓர் இளவரசியாகவே உணர வைக்கிறார்கள்” என்று உருகும் ஹன்சிகாவின் அடுத்த குறி அஜித்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in