

குளிரூட்டிய காதல்
பள்ளிக் காதலை துள்ளும் இளமையுடன் தந்த முதல் தமிழ்த் திரைப்படம் என்று 33 ஆண்டுகளுக்கு முன் வெளியான ’ பன்னீர் புஷ்பங்கள்’ படத்தைச் சொல்லிவிடலாம். ஜார்ஜ் ஹில் இயக்கத்தில் வெளியான ’ லிட்டில் ரொமான்ஸ்’ என்ற அமெரிக்கப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்ற குற்றசாட்டு இருந்தாலும் அன்றைய இளைஞர்களின் இதயத்தைக் குளிரூட்டிய இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. சந்தானபாரதியும் பி.வாசுவும் இணைந்து ’ பாரதி - வாசு ’ என்ற பெயரில் இயக்கிய இந்தப் படத்தின் நாயகன் சுரேஷ் நாயகி சாந்தி கிருஷ்ணா இருவரும் பெரும்புகழ் பெற்றார்கள். ஊட்டியின் அழகை முழுமையாக அள்ளிக்கொண்டு வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மொத்த படக்குழுவும் ஒரு சட்டகத்தில்
பேப்பர் பாய்
எத்தனை உயரத்துக்குச் சென்றாலும் சிலர் வந்தபாதை மறப்பதில்லை. சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வசிக்கும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளத் தினசரி 30 கிலோ மீட்டர் மிதிவண்டி மிதிக்கிறார். தனது பயிற்சியாளர் மற்றும் நண்பர்கள் குழுவுடன் தினசரி மிதிவண்டி மிதிக்கும்போது ” ஒரு பேப்பர் பையானாக மிதிவண்டி மிதித்து வீடுகள் தோறும் தினசரிப் பத்திரிகையை விநியோகித்தது நினைவுக்கு வருவதாக” சொல்கிறார். நீங்கள் இங்கே பார்கும் படம், பயிற்சியைத் தொடங்கும்முன் தலைக்கு மேல் தன் மிதிவண்டியைத் தூக்கிக் காட்டும் சரத்குமாரை.