Published : 12 Jul 2019 11:30 am

Updated : 12 Jul 2019 12:34 pm

 

Published : 12 Jul 2019 11:30 AM
Last Updated : 12 Jul 2019 12:34 PM

ஹாலிவுட் ஜன்னல்: வெல்ல முடியாத வில்லன்!

கதாநாயகனைவிட வில்லனைப் பலம் மிக்கவராகச் சித்தரிப்பதில் ஹாலிவுட் திரையுலகம் முன்னோடி எனலாம்.

‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படங்களின் வரிசையில் அதன் ஸ்பின்-ஆஃப் கதையாக வெளியாக உள்ள ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா’ படத்தில் நடுங்கவைக்கும் சூப்பர் வில்லனைக் காணலாம்.


 ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ நாயகர்களில் ஹாப்ஸ் (ட்வெய்ன் ஜான்சன்), ஷா (ஜேசன் ஸ்டாதம்) ஆகிய இரட்டையரை மையமாகக் கொண்டது இந்தப் புதிய படம். வரிசைத் திரைப்படங்களுக்கே உரிய வழக்கமான வாகன விரட்டல்களுடன் ஆக்‌ஷனும் காமெடியும் கலந்த புதுவிதமாய் ‘ஹாப்ஸ் & ஷா’ உருவாகி உள்ளது.

கணினி, மரபணுத் தொழில்நுட்ப மாற்றங்களுடன் எவராலும் எதிர்கொள்ள முடியாத புதிய சூப்பர் வில்லன் உருவாக்கப்படுகிறான். கொடிய வைரஸ் தொகுப்புடன் சர்வதேச அளவிலான மாபெரும் நாசவேலையை அவன் தொடங்குகிறான்.

அவனை முறியடிக்கும் பொறுப்பு ஹாப்ஸ், ஷா தலைமையிலான குழுவுக்கு வழங்கப்படுகிறது. தங்களுக்குள் ஏழாம்பொருத்தமாய் எப்போதும் முட்டிக்கொண்டிருக்கும் இந்த இரட்டையர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களுக்குள் வாரிக்கொள்வதும் வில்லனை அழிப்பதற்கான வாய்ப்புகளை இணைந்து உருவாக்குவதுமே கதை.

சூப்பர் வில்லனாக இட்ரிஸ் எல்பா தோன்றுகிறார். ஷாவின் சகோதரியாகவும் எம்16 உளவு அமைப்பின் அதிகாரியாகவும் வெனிசா கெபி வருகிறார். மல்யுத்த மேடைகளில் மல்லுக்கட்டுபவரும் ட்வெய்ன் ஜான்சனின் உறவினருமான ரோமன் ரெய்ன்ஸ் இப்படத்தில் அவரின் தம்பியாகத் தோன்றுகிறார்.

ஹாலிவுட் திரைப்படங்களின் பிரபலச் சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளரும் ‘ஜான் விக்’ போன்ற சாகசத் திரைப்படங்களை இயக்கியவருமான டேவிட் லீச் (David Leitch) புதிய ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

 ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ தொடரில் நேரடி வரிசையின் இறுதியான இரு திரைப்படங்கள் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெளியாக உள்ளன. இந்த வரிசையில் திட்டமிடப்பட்டுள்ள 3 ஸ்பின் ஆஃப் திரைப்படங்களில் முதலாவதான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா’, ஆகஸ்ட் 2 அன்று வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தினைக் காண:

https://bit.ly/2Gecvox


ஹாலிவுட் ஜன்னல்அறுபதுகளின் ஹாலிவுட்க்வான்டின் டொரான்டினோலியனார்டோ டிகாப்ரியோஹாலிவுட் வாய்ப்புகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author