வலையை ஆக்கிரமித்த தலைப்பு

வலையை ஆக்கிரமித்த தலைப்பு
Updated on
1 min read

கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவு 12 மணிக்கு அஜித் படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’ என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் அதிகாரபூர்வ போஸ்டர் வெளியீடு எப்போது என்பதற்கு #yennaiarindhaalposterrelease என்ற டேக் தயார்செய்து டிரெண்ட் செய்துவந்தார்கள் ‘தல’ ரசிகர்கள். பகல் ஒரு மணிக்கு அதிகாரபூர்வ போஸ்டர் டிசைன் வெளியிடப்பட்டது.

படத்தின் தலைப்பு, போஸ்டர் என ஒரே நாளில் வெளியானதில் குஷியான ரசிகர்கள் இந்திய அளவில் #YennaiArindhaal என்ற டேக்கை முதல் இடத்திற்குக் கொண்டுவந்து அதை இரண்டு நாட்களுக்கு நீட்டித்து மாஸ் காட்டினார்கள். தமிழ்த் திரையுலகினர் பலரும் தலைப்பு மற்றும் போஸ்டர் டிசைனுக்குத் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in