

டங்கா மாரி
‘அனேகன்’ படத்தின் ஆல்பத்தில் மரண கானா விஜி, தனுஷுடன் இணைந்து பாடியிருக்கும் ‘டங்கா மாரி’ பாடல் ட்விட்டரைக் கலக்கியது. பலரும் அப்பாடலைப் பகிர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், மரண கானா விஜி, தனுஷுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். அப்பாடலுக்கு உயிர் கொடுத்தது மரண கானா விஜிதான் என்று ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டர் தளத்தில் கூறினார்.
முற்றுப்புள்ளி
முன்னர் அறிவிக்கப்பட்டதுபோல நவம்பர் 9-ம் தேதி ‘லிங்கா’ இசை வெளியீடு நடைபெறவில்லை; ஆகவே படம் வெளியாகத் தாமதமாகும் என்று பரவிவந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் செளந்தர்யா ரஜினிகாந்த். ‘லிங்கா’ படத்தின் தமிழ், இந்தி, தெலுங்கு என ஒட்டுமொத்த உரிமையையும் ஈராஸ் நிறுவனம் பெற்றிருப்பதாகவும், இசை நவம்பர் 16-ம் தேதி வெளியாகும் என்றும் ட்விட்டர் தளத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் #lingaaaudiofrom16 என்ற டேக்கை டிரெண்ட் செய்தார்கள்.
கமல் - அனுஷ்கா
நவம்பர் 7 அன்று கமலுக்கு மட்டுமல்ல அனுஷ்காவுக்கும் பிறந்த நாள். அன்றைய கமல் நிகழ்ச்சிகள் குறித்துப் பலரும் விவாதித்துவந்த நிலையில், எதுவுமே செய்யாமல் அனுஷ்காவும் டிரெண்டானார். #happybirthdaykamalhaasan, #kamalhaasan60thbirthday, #hbdkamal, #hbdsweetyanushka எனப் பிறந்தநாள் டேக்குகள் டிரெண்டாயின.