

பொறியியல் படிப்பை பாதியி லேயே நிறுத்திய இரு இளை ஞர்கள், அதே பொறியியல் படிப்பு சார்ந்து நடக்கும் ஊழலை தந்திரமாக கண்டுபிடிப்பதுதான், ‘இவன் தந்திரன்’.
கவுதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி இருவரும் சென்னையின் ரிச்சி தெரு வில் மின்னணு சாதனங்கள் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கிறார்கள். இருவரும் பொறியியல் கல்வியை பாதியில் கைவிட்டவர்கள். கவுதம் கார்த்திக்கிடம் பொறியியல் கல்லூரி மாணவி ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு லேப்டாப் வாங்குகிறார். சில நாட் களிலேயே அது பழுதாவதால் திரும்பவும் அவரிடம் வந்து புது லேப்டாப் வேண்டுமென்று சண்டை பிடிக்கிறார். பின்னர் அந்த மோதல் காதலாக மாறுகிறது.
இதற்கிடையே, கல்வித்துறை அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் கவுதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி இருவரும் சிசிடிவி கேரமா பொருத்திவிட்டு தாங்கள் செய்த வேலைக்கான பணத்தை கேட்கிறார்கள். அவர்கள் பணத்தை தராமல் அலைக்கழிக்கிறார்கள். ஒருமுறை பணத்துக்காக அவர்கள் அங்கே செல்லும் போது, சூப்பர் சுப்பராயன் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் தொடர்பாக லஞ்சம் வாங்குவதையும், அரசியலில் இருந்துகொண்டு பெரிய அளவில் மோசடியில் ஈடுபடுவதையும் தெரிந்து கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவரை எதிர்த்து செயல்பட துணிகிறார் கள். அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் என்ன? கவுதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத் காதல் என்ன ஆனது என்பதை நோக்கி படம் செல்கிறது.
அரசியல்வாதிகளிடம் விலைபோகும் கல்லூரி நிர்வாகம், அதன் விளைவாக கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் பொறியியல் கல்லூரி மாணவர் களின் நிலை, கல்வி சார்ந்து நடக்கும் லஞ்ச பேரம் ஆகியவற்றை ஆராய்ந்து தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் ஆர்.கண்ணன். ரூபாய் நோட் டுக்குள் ‘சிப்’பை வைத்து பணத்தை பின்தொடர்வது, சாலையில் ஸ்கேனர் வைத்து வாகனத்தை பின்தொடர்வது என தொழில்நுட்பங்களை கையாண்ட ஐடியாக்கள் சுவாரஸ்யம்.
ஆனாலும் படம் முழுக்க பல்வேறு காட்சிகளை படமாக்கிய விதத்தில் இயக் குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருக் கலாம். கவுதம் கார்த்திக் டெக்னாலஜி யில் கில்லாடி என புரியவைப்பதற்கு புகுத்தப்பட்ட ஆரம்ப காட்சிகள், அதை தொடர்ந்து வரும் பாடல், செல்போன் கண்டுபிடிப்பு போன்றவை கதைக்கு தடங்கலாக நிற்கின்றன.
கவுதம் கார்த்தின் நடிப்பில் முன்னேற் றம் தெரிகிறது. துறுதுறுப்பான பாத்தி ரத்தை சரியாக பூர்த்தி செய்திருக்கிறார். நாயகிக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும் வசதியில்லாமல் தவிக்கும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவியாக நெகிழ்ச்சியடைய வைக்கிறார்.
இன்ஜினீயரிங் கல்லூரிகளை கலாய்ப்பது, ஐடி வேலையை ஆதரிப் பது, ஓலா டாக்ஸி, கூவத்தூர் ரெசார்ட் என ஆர்.ஜே.பாலாஜி அடிக்கும் கமெண்ட் சிரிக்க வைக்கிறது. வழக்க மான காட்சிகளால் மெதுவாக நகரும் படத்துக்கு பெரும் பலம் வில்லன் சூப்பர் சுப்பராயன். அவரின் தோற்றமும், மிரட்டும் பார்வையும் இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்துகிறது.
எஸ்.எஸ்.தமன் இசையில் 2 பாடல் கள் கதைக்கு தேவைப்படாத நிலையில், பின்னணி இசை அந்த குறையை போக்கு கிறது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு இரவையும், கதையில் வெளிப்படும் தொழில்நுட்ப அம்சங்களையும் அளவாக பதிவு செய்திருக்கிறது.
மிக முக்கிய பிரச்சினையை கையி லெடுத்த இயக்குநர் ஆர்.கண்ணன், திரைக்கதையில் இன்னும் விறுவிறு தந்திரம் கையாண்டிருந்தால் தந்திரன் மனதில் நின்றிருப்பான்.