

சென்னை நகரின் இருண்ட பரிமாணங் களையும் அவற்றை மீறிச் சுடர்விடும் மனித நேயத்தையும் காட்டுகிறது ‘மாநகரம்’.
ஸ்ரீ, சந்தீப், ரெஜினா, சார்லி, அருண் அலக் ஸாண்டர், ராமதாஸ், மதுசூதனன் ஆகியோர் சென்னை மாநகரின் வெவ்வேறு அடையாளமாக வாழ்பவர்கள். இவர்களின் வாழ்க்கையை ஒரு நாளில் நடக்கும் சில சம்பவங்களினூடே இணைப்பதுதான் ‘மாநகர’த்தின் களம்.
பல்வேறு இழைகளை ஒன்றாக இணைத்துக் கதை சொல்லும், இயக்கும் திரைக்கதை உத்தி தமிழுக்குப் புதியதில்லை என்றாலும் அதை அழுத்தமாக சொன்னது ஒரு சிலர்தான். அந்த வரிசையில் லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களையும் அவர்களை இணைக்கும் சம்பவங்களையும் வைத்துக்கொண்டு பதைபதைக்க வைக்கும் திரைக்கதைப் பயணத்தைச் சாத்தியப் படுத்திவிடுகிறார்.
சென்னையின் பல்வேறுபட்ட மனிதர்கள், அவர்களுடைய மாறுபட்ட இயல்புகள், வெவ்வேறு இடங்கள், தருணங்கள், செயல்கள் ஆகியவற்றால் உருவாகும் சிக்கல்களை யதார்த்தமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார். ரவுடிகள், ஐ.டி. துறை ஊழியர் கள், காவல் துறையினர், சாமானிய மனிதர்கள் ஆகி யோரை அச்சு அசலாகக் கண் முன் கொண்டு வருகிறார்.
கதைக் களத்தையும் மாந்தர்களையும் நிகழ்வு களையும் விரிவாகவும் துல்லியமாகவும் சித்தரிக்கும் இயக்குநர், சிலவற்றைச் சொல்லாமல் சொல்வதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். உதாரணமாக, தன் னிடம் காதல் யாசகம் கேட்கும் சந்தீப்பிடம் ரெஜினா கோபப்பட்டாலும், சந்தீப்பின் மீது அவருக்கும் காதல் இருப்பதை மிக நுட்பமாக உணர்த்திவிடுகிறார். ராம தாஸின் வெள்ளந்தியான இயல்பு, நேர்மையும் எளிமை யுமாய் வளையவரும் சார்லி யின் இயல்பு, சென்னை யைப் பற்றிய கசப்பைச் சுமக்கும் , சென்னையின் இருண்ட பகுதிகள், ரவுடிகளின் உலகம், சிக்கலில் மாட்டிக் கொண்ட ரவுடிகள், பெரிய தாதா வாக இருந்தாலும், தன் மகனைக் காப்பாற்றுவதற்காக அலைக்கழிக்கப்படும் மது சூதனன் எனப் பாத்திர வார்ப்பிலும் சூழல் சித்தரிப்பிலும் லோகேஷ் அசரவைக்கிறார்.
அடுத்தடுத்து யதேச்சையாக நடக்கும் சம்பவங் களை வைத்தே கதையை நகர்த்திச் செல்வது ஒரு கட்டத்துக்கு மேல் செயற்கையாகத் தெரிகிறது. மாநகரின் முகத்தைக் காட்ட இத்தனை தற்செயல் நிகழ்வுகளுக்குப் பதில் இயல்பான திருப்பங்களை அமைத்திருக்கலாம். எனினும் கடைசிக் காட்சிகளில் உருப்பெறும் வலுவான உணர்ச்சிச் சுழிப்புகளில் இவை அடித்துச் செல்லப்படுகின்றன. , சந்தீப் ஆகியோரின் மாற்றம் நிகழும் விதம் இயல்பாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. ராமதாஸ் கதாபாத்திரத்தின் முடிவு நெகிழவைக்கும் கவிதை.
, படத்துக்கு படம் மாறுபட்ட நடிப்பால் ஈர்க்கிறார். கோபக்கார இளைஞனாக சந்தீப் கிஷன், நகரத்தின் ஐ.டி யுவதியாக ரெஜினா என இருவரும் கச்சிதம். சார்லிக்குச் சிறப்பான கதாபாத்திரம். அருமையாகச் செய்திருக்கிறார். அருண் அலெக்ஸாண்டர் உடல்மொழியில் ஈர்க்கிறார். படத்தின் அதிசுவாரஸ்யமான கதாபாத்திர மான ராமதாஸ், படத்தின் இறுக்கத்தைக் குறைக்கிறார்.
ஃபிலோமினின் கச்சிதமான படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்பை உறுதிசெய்கிறது. செல்வகுமாரின் அபாரமான ஒளிப்பதிவு படத்தைத் தாங்கி நிற்கிறது. பளிச்சென்ற ஐ.டி. நிறுவனம், இரவு நேரத்தின் சந்து பொந்துகள் ஆகியவை திரையில் அற்புதமாக உயிர்பெறுகின்றன. ஜாவேத் இசையில் பாடல்கள் மனதில் நிற்க மறுக்கின்றன. பின்னணி இசையில் ஈடுகட்டிவிடுகிறார். இயக்குநர் லோகேஷ் பல இடங்களில் வசனங்களிலும் கவனிக்க வைக் கிறார்.
தற்செயல் நிகழ்வுகளின் ஆதிக் கம், ஆங்காங்கே தெரியும் சில ஓட்டைகள் ஆகியவை படம் முடியும்போது பெரிதாகத் தெரி யாமல் இருப்பதால் நிறைவான படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது.