ஆசிய பசிபிக் திரைப்பட விருதுக்கு ‘லஞ்ச்பாக்ஸ்’ பரிந்துரை

ஆசிய பசிபிக் திரைப்பட விருதுக்கு ‘லஞ்ச்பாக்ஸ்’ பரிந்துரை
Updated on
1 min read

ஏழாவது ஆசிய பசிபிக் திரை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் ரிதேஷ் பத்ராவின் இயக்கத்தில் வெளியான ‘லஞ்ச்பாக்ஸ்’ உள்பட 4 இந்தியத் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வழங்கப்படும் மிக உயரிய திரைப்பட விருதாக ஆசிய பசிபிக் திரை விருது (ஏபிஎஸ்ஏ) கருதப்படுகிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 39 படங்கள் நடப்பாண்டின் விருது பெறுவதற்கான போட்டிக்குத் தேர்வாகியுள்ளன.

இதனை பிரிஸ்பேன் மாகாண மேயர் கிரஹாம் குய்ர்க் அறிவித்துள்ளார்.

முதன்முறையாக வங்கதேசம், ஜோர்டான், சவூதி அரேபியா நாடுகளிலிருந்து திரைப்படங்கள் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளன.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஓமர், இரானில் இருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட le passe, Soshite chichi ni naru’, வங்கதேசத்தின் ‘டெலிவிஷன்‘, இலங்கையின் ‘வித் யு, வித் அவுட் யு’, ஆஸ்திரேலி யாவின் ‘தி டியூன்’ ஆகிய ஆறு படங்களுக்கு இடையே விரும்பத்தக்க சிறந்த திரைப்பட விருதுக்காக கடும் போட்டி நிலவுகிறது. இதில் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் இந்தியாவிலிருந்து லஞ்ச்பாக்ஸ் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருமணமான, அவ்வாழ்வில் திருப்தியுறாத ஒரு பெண் (நிர்மத் கௌர்), தன் கணவனுக்கு அனுப்பும் மதிய உணவு திருமணமாகாத வேறொருவருக்கு (இர்பான்கான்) மாறிச் சென்றுவிடுகிறது. ஓரிருமுறைக்கு மேல் இது தொடர, அவ்விருவருக்கும் இடையே இனம்புரியாத உணர்வு தொற்றிக்கொள்வதை லஞ்ச்பாக்ஸ் படம் விவரிக்கிறது.

மற்றொரு இந்தியத் திரைப்படமான மான்சூன் சூட்அவுட் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த ஆவண சிறப்புத் திரைப்பட த்துக்கான விருதுக்கு அமித் விர்மானியின் தயாரிப்பில் உருவான ’Menstural Man’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய சிறார் திரைப்படச் சங்கத்தின் தயாரிப்பில் உருவான ‘Goopi Gawaiya Bagha’ திரைப்படம் சிறந்த அனிமேஷன் படத்துக்கான பிரிவில் போட்டியிடுகிறது. இந்த விருதுகள் டிசம்பர் மாதம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in