

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பயணித்து வந்த சரண்யா, லண்டன் பறந்ததால் சில மாதங்களுக்கு சின்னத்திரையில் முகம் காட்டாமல் இருந்தார். தற்போது சென்னை திரும்பியதும் ‘நியூஸ் 18’ தொலைக்காட்சியில் சீனியர் செய்தியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
‘‘லண்டனில் இருந்த நாட்களை பயனுள்ளதாக கழிக்கவேண்டும் என்று அங்கு மொழியியல் படிப்பை முடித்தேன். மீண்டும் நான் சென்னை வந்ததுக்கு முக்கிய காரணமே, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம்தான். அந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடித்ததற்காக கிடைத்த நற்பெயர்தான் என்னை மீண்டும் சென்னைக்கு வரவழைத்தது. இங்கே நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. புதிய தலைமுறையில் 4 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறேன்.
அந்த அடையாளத்தை முற்றிலும் மாற்றும் வகையான கதாபாத்திரங்கள் அமைந்ததும் நடிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன். மரத்தை சுற்றும் கதாபாத்திரம் வேண்டாம் என்பதில் இப்போதைக்கு தெளிவாக இருக்கிறேன். எப்போதும் புதிய இடத்தில் பணிபுரிய அதிக சூழல் கிடைக்கும். அந்த வகையில் ‘நியூஸ் 18’ தேசிய தொலைக்காட்சியில் திரைக்கு முன் வரும் அளவுக்கு, திரைக்கு பின்னால் நின்று பணிபுரியவும் நிறைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதற்கான வேலைகளில் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன்’’ என்கிறார் சரண்யா.
முழு நேர சினிமா!
வரலாற்றுத் தொடர்கள், திகில் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்த ஸ்வேதா, தற்போது மாடலிங், விளம்பரப் படம், திரைப்படங்களில் குணச்சித்திர வேடம் என்று பிஸியாகி விட்டார்.
‘‘இந்த உலகத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எது?ன்னு கேட்டா, நடிப்புதான்னு அடிச்சு சொல்லுவேன். அதுவும் தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களுக்கு அழகான இடம் உருவாகியுள்ளது. அதில் அதிக மார்க் வாங்க வேண்டும் என்றுதான் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளேன். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம், சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா இயக்கும் புதிய படம் என்று டைரி நிரம்பத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, ஃபேஷன் டிசைனிங் ஆர்வமும் சேர்ந்துள்ளது. திரையில் பார்க்கும் என் அனைத்து ஆடைகளும் நானே டிசைன் பண்ணி உடுத்திக்கொள்வதுதான். அதுவே எனக்கு பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது’’ என்கிறார் ஸ்வேதா உற்சாகத்துடன்.
‘‘இந்த உலகத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எது?ன்னு கேட்டா, நடிப்புதான்னு அடிச்சு சொல்லுவேன். அதுவும் தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களுக்கு அழகான இடம் உருவாகியுள்ளது. அதில் அதிக மார்க் வாங்க வேண்டும் என்றுதான் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளேன். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம், சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா இயக்கும் புதிய படம் என்று டைரி நிரம்பத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, ஃபேஷன் டிசைனிங் ஆர்வமும் சேர்ந்துள்ளது. திரையில் பார்க்கும் என் அனைத்து ஆடைகளும் நானே டிசைன் பண்ணி உடுத்திக்கொள்வதுதான். அதுவே எனக்கு பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது’’ என்கிறார் ஸ்வேதா உற்சாகத்துடன்.
இன்று இறுதிச்சுற்று
மிக பிரம்மாண்டமாக 1,000 நபர்கள், 30 குழுக்கள் என்று விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரியில் தொடங்கி ஒளிபரப்பாகிவரும் ‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’ நடன நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சென்னையில் இன்று நடக்கிறது.
பல்வேறு நடனக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை காட்ட இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. எந்த வயதினரும் கலந்துகொள்ளலாம். மேலும் அவர்கள் ஒரு குழுவாகவோ, தனியா கவோ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கல்யாண் மாஸ்டர், நடிகைகள் ராதா, பிரியாமணி ஆகியோர் பங்கேற்றனர். இதுவரை தொலைக்காட்சிகளில் இல்லாத சில அரிய நடனப் படைப்பு களை போட்டியாளர்கள் இதில் வழங்கி னர்.
ஒவ்வொறு சுற்றிலும் போட்டியாளர் கள் தங்கள் தனித்துவமான பாணியை விளக்கி நடன நிகழ்ச்சியை வழங்கினர். சமீபத்தில் நடந்த காலிறுதி சுற்றில் சிறந்த 10 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர் களில் மிகச்சிறந்த நடனத்தை வெளிப்படுத்துவது யார் என்பது இன்று தெரிந்துவிடும். பிரபுதேவா உள்ளிட்ட கலைத்துறையின் முக்கிய நடன ஜாம்பவான்கள் இன்று நடக்கும் இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.
மீண்டும் வந்தாச்சு!
சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப் பாளினியாக முகம்காட்டத் தொடங்கி யுள்ளார் ஆர்த்தி.
‘‘மகன் தியோடன் பிறந்ததும், அவனைக் கவனித்துக்கொள்வதற்காக 6 மாதங்கள் சின்னத்திரைக்கு இடைவேளை விட்டிருந்தேன். அப்போதே, தொகுப்பாளினி, நெடுந்தொடர் என்று பல வாய்ப்புகள் தேடி வந்தன. மகனுக்கு நேரம் ஒதுக்காமல், முழு நேரமும் எப்படி பணியாற்ற முடியும்? அதனால்தான் சில மாதங் களுக்கு பகுதிநேர தொகுப்பாளினியாக முகம் காட்டலாம் என்று முடிவு செய்துள்ளேன். புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘வானவில்’, ‘மதிமுகம்’ ஆகிய தொலைக்காட்சிகளில் முக்கிய நிகழ்ச் சிகளின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். வாரத்தில் சில நாட்கள்தான் படப்பிடிப்பு என்றாலும், மகன் தியோடனை வீட்டில் விட்டுவிட்டு வருவது கஷ்டமாகத்தான் இருக்கிறது’’ என்கிறார் ஆர்த்தி.