

மதுரையை சேர்ந்த ஒரு ரவுடி காதலில் தோல்வி அடைந்து, துபாயில் பெரிய தாதாவாகி.. சென்னையில் ஒரு நரைத்த தாத்தா வாகி ஒரு இளம்பெண்ணை காத லித்து(?) .. அந்த காதலில் தோல்வி அடைந்து பழிவாங்க துடிக்கும் சைக்கோ ஆகி... என எக்குத்தப்பாக நீளும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் கதையை(!) ஒரு வரியில் சொல்ல முடியாது.
மதுரை கூலிப்படையைச் சேர்ந்த ரவுடியான சிம்பு, காரணமே இல்லா மல் ஸ்ரேயாவின் காதலுக்காக ரவுடித் தனத்தை விட்டுவிட நினைக்கிறார். இந்த நேரத்தில் போலீஸ் அவரை கைது செய்கிறது. ஸ்ரேயாவுக்கு திருமணம் நெருங்கும்போது மற்ற கைதிகள் சேர்ந்து சிறைச்சாலையை உடைத்து சிம்புவை தப்ப வைக்கிறார் கள். ஆனால் அவர், ஸ்ரேயாவுக்காக தன் காதலை விட்டுக்கொடுக்கிறார்.
தமன்னாவிடம் தாத்தா சிம்பு தன் காதலைச் சொல்ல நினைக்கும் போது, அவர் இளைஞர் சிம்புவை காதலிப்பதாகச் சொல்கிறார். இத னால் ஆத்திரம் அடையும் தாத்தா, தமன்னாவை பழிவாங்க திட்டம் போடு கிறார். இந்த திட்டம் நிறைவேறியதா என்று தெரிந்துகொள்ள 2-ம் பாகம் வரை காத்திருக்கச் சொல்கிறார்கள்!
இப்படி ‘அன்பானவன் அடங்காத வன் அசராதவன்’ படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் படத்தில் ஏதோ கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் ஒரு கட்டுக்குள் இருப்பதாகப் படிக்கிறவர்கள் நம்பி விடும் அபாயம் உள்ளது. ஆனால் வன் முறை, பாலியல் வக்கிரம், பெண்களை இழிவுபடுத்துவது இவை மூன்றின் மீது மட்டுமே சவாரி செய்திருக்கிறார்கள் சிம்புவும், இயக்குநர் ஆதிக் ரவிச் சந்திரனும். இரண்டு கதாபாத்திரங் கள், மூன்று விதமான தோற்றங்கள் என சிம்பு பின்னிப் பெடலெடுக்க வேண் டிய படம்தான். ஆனால், அப்படி எல் லாம் எதுவும் இல்லை. காதல் என்ற பெயரில் சிம்பு பேசும் வசனங்களை சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
கோவை சரளா, கஸ்தூரி, ஸ்ரேயா, தமன்னா என்று பேர் வாங்கிய நடிகை கள் எல்லாம் இதில் பேருக்குத்தான் இருக்கிறார்கள்.
படத்தில் ஒரே ஆறுதல் - ‘குடிப் பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்’ என மொட்டை ராஜேந் திரன் குரலில் (கட்டாயத்துக்காகப்) போடுகிற எச்சரிக்கை ஸ்லைட்!
கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் எந்தக் குறையும் இல்லை. யுவன் ஷங்கர் ராஜா அளவுக்கு அதிக மாகவே வாசித்திருக்கிறார்.
தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கதை இலக்கை நோக்கி பய ணிக்காமல், தறிக்கெட்டு பயணிக் கிறது படம். சிம்பு எதற்காக கொலை செய்கிறார்? பாஸ்போர்ட், விசா எது வும் இல்லாமல் எப்படி துபாய் போகிறார்? அங்கு எவ்வாறு பெரிய தாதா ஆகிறார்? கஸ்தூரி தலைமையிலான போலீஸார் உலகம் முழுவதும் சல்லடை வீசி தேடும் போது, எப்படி அசால்ட்டாக தமன்னாவை காதலித்துக்கொண்டிருக்கிறார் என்று பல கேள்விகளுக்கு பதில் இல்லை.
60 வயதான தாத்தாவுக்கு 20 வயது பெண் மீது ஏற்படும் உணர்வுக்கு பெயர் காதலா? 'இன்னைக்கு நைட்டுக்கு மட் டும்?' என ஒலிக்கும் பாடல் தேவையா?
எந்த பழி பாவமும் அறியாமல் இருக்கும் ஒரு பெண் தன்னை காத லிக்கவில்லை என்பதற்காக அவள் மீது வஞ்சம் வைப்பது, பழிவாங்கத் துடிப் பது எப்பேர்பட்ட வக்கிர வன்முறை. நியாய தர்மங்கள் பற்றியோ, நாட்டு நடப்பு பற்றியோ படக்குழு கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத் தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படம் இது. சமூகப் பொறுப்பில்லாத சபலக்கார ‘ரசிகர்’ களை அதே பாணியில் கவர முயன்று... அதையும் உருப்படியாகச் செய்யாமல் தோற்றுப் போயிருக்கிறார்.
திமிரானவன், திருந்தாதவன், திக்கு திசை தெரியாதவன்!
செல்ஃபி விமர்சனம்
உங்கள் ‘கப் ஆஃப் டீ’ என்ன? அதற்கும் ‘அ.அ.அ’வுக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஆனால் அந்த கப் டீயை நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தியேட்டருக்குப் போகத் துணிவதற்கு முன்பு செல்ஃபி விமர்சனத்தைப் பாருங்கள்!