

உரிய தருணம் வரும்போது விஸ்வரூபம் எடுக்கும் வாமனனின் கதைதான் ‘கடுகு’.
புலி வேஷக் கலைஞரான ராஜ குமாரன், அக்கலை அழிந்துவரு வதால் வறுமையில் வாடுகிறார். தரங்கம்பாடியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வெங்கடேஷுக்கு உதவியாளராக அவருடன் செல்கிறார். அந்த ஊரில் தன்னால் முடிந்த அளவில் பிற ருக்கு நன்மைகள் செய்து வருகிறார்.
பரத் அந்த ஊரில் வளரும் அரசியல்வாதி. இளைஞர்களிடை யில் செல்வாக்கு பெற்ற குத்துச் சண்டை வீரர். அந்த ஊருக்கு வரும் அமைச்சர் தவறான நட வடிக்கையில் ஈடுபடுகிறார். அந்தத் தவறின் விளைவுகள் என்ன, அதில் பரத்தின் பங்கு என்ன, ராஜகுமா ரனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ஆகிய கேள்விகளுக்குப் பதிலாக விரிகிறது ‘கடுகு’ படத்தின் திரைக்கதை.
பல்வேறு மரபுக் கலைகளும் கவனிப்பாரற்று விளிம்பு நிலையில் தள்ளப்பட்டிருக்கின்றன. அவற் றில் ஒன்றுதான் புலிவேஷம். படம், இந்தக் கலையும் கலைஞர்களும் உள்ள அவல நிலை மீது சமூகத்தின் கவனத்தைத் திருப்புகிறது. மரபுக் கலைகளுக்கும் கலைஞர்களுக் கும் சமுதாயத்தில் இன்று உள்ள மோசமான நிலையை அம்பலப் படுத்துகிறது. இதையே கதையின் மையமாகக் கொள்ளாமல், இதைப் பின்னணியாகக் கொண்டு நீதிக் கும் அநீதிக்கும் இடையேயான போராட்டத்தை இயக்குநர் விஜய் மில்டன் சித்தரிக்கிறார். அந்தப் போராட்டம் வழக்கமான சங்கதி களுடன் எதிர்பார்க்கக்கூடிய வகை யில் அமைந்திருப்பதுதான் பிரச்சினை.
புலிப்பாண்டி, அநிருத், டீச்சர், பரத்தின் பாட்டி, காவல்துறை அதிகாரி ஆகிய கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. பரத்தின் இயல்பை எளிதாக வகைப்படுத்த முடியாத அளவுக்கு அவருடைய பாத்திரத்தை அமைத்திருக்கிறார். புலிவேஷ நடனம் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூட நிகழ்ச்சியில் குழந்தை களை மையப்படுத்தி அவர்கள் கேட்கும் கேள்விகளை வெளிப் படுத்தியிருக்கும் விதம் அழகு.
எல்லாமே திட்டமிட்டதுபோல நடக்கின்றன. உண்மை அனை வருக்கும் தெரிந்த பிறகும், கதை அடுத்த கட்டத்துக்கு நகராமல் சண்டித்தனம் செய்கிறது.
வசனங்கள் சமகால வாழ்வின் மீதான கூர்மையான விமர்சனமாக வெளிப்படுகின்றன. டீச்சர் தன் கதையை ராஜகுமாரனிடம் சொல் லும் இடம் நெகிழவைக்கிறது. ராஜ குமாரன் தன் மனம் கவர்ந்த பெண் ணைச் சந்திக்க மறுப்பதற்குச் சொல்லும் காரணம் மனதைத் தொடுவதாக இருந்தாலும் அவரை இந்த அளவுக்குத் திகட்டத் திகட்ட நல்லவராகக் காட்ட வேண்டுமா என்னும் கேள்வியும் எழுகிறது. அவ ரிடம் அபாரமான திறமை இருக் கிறது என்பதை இயக்குநர் முன்பே நிலைநாட்டிவிடுவதால் கிளைமாக் ஸில் புலியாகச் சீறும்போது அதில் நம்பகத்தன்மை கூடிவிடுகிறது.
ராஜகுமாரனின் நண்பன் தான் காதலிக்கும் பெண்ணுக்குத் தூது விடுவதும் அதை அவள் தவறாகப் புரிந்துகொண்டு பரத்தை நினைத்து உருகுவதும் படத்தோடு ஒட்டவே இல்லை. அரசியல்வாதியும் பரத் தும் சம்பந்தப்பட்ட காட்சிகள் செயற் கையாக உள்ளன. காவல்துறை குற்றத்தைக் கையாளும் விதம் வழக்கம்போலவே இருந்தாலும் மனசாட்சி கொண்ட அதிகாரியான வெங்கடேஷுக்கு வரும் சிக்க லைக் காட்சிப்படுத்திய விதம் நன்றாக உள்ளது.
மிகவும் சாந்தமாக வலம் வரு கிறார் ராஜகுமாரன். புலி வேஷம் போடும்போது மட்டும் அவரிடம் வரும் ஆக்ரோஷம் அற்புதம். உடல் மொழி, இரக்க குணம், வெகுளித் தனம் ஆகியவற்றை நன்கு வெளிப் படுத்தி நிறைவாகச் செய்திருக் கிறார். ஒரு சில இடங்களில் மிகை நடிப்பைத் தவிர்த்திருக்கலாம்.
ராஜகுமாரனின் நண்பனாக நடித்திருக்கும் பாரத் சீனி நல்ல கண்டுபிடிப்பு. காவல்துறை அதி காரிகள் துரத்தும்போது தப்பித்து, காதலியிடம் சைகையால் உணர்த் தும் காட்சியில் தியேட்டரில் அப் ளாஸ் அள்ளுகிறது. படத்தில் வரும் சிறுசிறு கதாபாத்திரங்கள்கூட மிக வும் கவர்கிறார்கள். பரத்தின் பாட்டி யாக வருபவரின் கிளைமாக்ஸ் காட்சி நடிப்பு அபாரம்.
பின்னணி இசை, பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக் கலாம். படத்தின் இயக்குநரே ஒளிப் பதிவாளராகவும் இருப்பதால் கிடைக்கும் பலனை படம் முழுமை யாக அறுவடை செய்துள்ளது.
நல்ல விஷயங்களைச் சொல்ல நினைப்பது பாராட்டுக்குரியதே ஆனால் அதைச் சொன்ன விதத்தில் பல இடங்களில் செயற்கைத்தனம் தலைதூக்குவது நெருடலை ஏற் படுத்துகிறது.
விளிம்பு நிலையில் இருக்கும் கலையின் மீது கவனம் செலுத்தி யிருப்பதும், மையப் பாத்திரத் தையும் அதற்கான நடிகரையும் வித் தியாசமாகவும் துணிச்சலோடும் முடிவுசெய்திருப்பதும் பாராட்டப் பட வேண்டியவை. புலியாட்டத் தின் சித்தரிப்பு சில இடங்களில் அசோகமித்திரனின் ‘புலிக் கலை ஞன்’ சிறுகதையை நினைவு படுத்துகிறது.
பார்வையாளர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய சில காட்சிகளாலும் கதாபாத் திரங்களாலும் செயற்கையான சினிமாத்தனங்களை மீறிப் படம் நின்றுவிடுகிறது.