பாடகர் மன்னா டே காலமானார்

பாடகர் மன்னா டே காலமானார்
Updated on
1 min read

இந்தி திரையுலகில் பிரபல பாடகரான மன்னா டே இன்று காலை பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 94.

1943ல் பாடகராக அறிமுகமானவர் மன்னா டே. இதுவரை சுமார் 3500 பாடல்கள் பாடியிருக்கிறார்.

இந்தி, பெங்காலி என பல மொழிகளில் இவர் தனது குரலால் ரசிகர்களை மயக்கினார். 'Ae meri zohrajabeen', 'Pyar hua ikrar hua' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்.

சினிமாவிற்கு இவர் ஆற்றியிருக்கும் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசாங்கம் 2007ம் ஆண்டு இவருக்கு தாதா சாகிப் பால்கே விருதினை வழங்கி கெளரவித்தது.

கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவிற்கு அமிதாப் பச்சன், பிரகாஷ்ராஜ், குஷ்பு உள்ளிட்ட பல்வேறு இந்திய திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை அவரவர் டிவிட்டர் தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in