

குதிரைப் பந்தயத்தில் பெரும் தொகையை இழந்துவிட்டு, அதை இழந்த இடத்தில்தான் தேட வேண்டும் என்ற முடிவுடன் கிண்டி குதிரைப் பந்தய மைதானத்தையே சுற்றிவரும் பரத், வேலையில் சேர்வதற்காக திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் கதிர், ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு தனது குதிரையைப் பந்தயத்தில் ஓடவிடத் தயாராகும் பெரும் செல்வந்தரான ராதாரவி இந்த மூன்று கதாபாத்திரங் களின் வாழ்க்கையோடும் குதிரைப் பந்தயம் எப்படி விளையாடுகிறது என்பதுதான் கதை.
ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றிக் கவரும் மாய உலகம் குதிரைப் பந்தய மைதானம். அரசால் அங்கீகரிக் கப்பட்ட இந்தச் சூதாட்டத்தின் பின்னால் இயங்கும் நிழலுலகம், அதன் மாயக் கவர்ச்சி, அதில் வெல்லத் தேவைப்படும் சாதுர்யத்தின் உண்மையான முகம் ஆகிய சரடுகளைக் கொண்டு, குழப்பமில்லாத திரைக்கதையின் மூலம் விறு விறுப்பான படத்தைத் தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் கிருஷ்ண சாமி.
குதிரைப் பந்தயத்தை பற்றி ஆவணப்படத் தன்மை யுடன் அதிகம் பேசிக் கொண்டிருக்காமல் தேவை யான அளவு விவரங்களைத் தந்துவிட்டு, அதற்குள் சிக்கி யிருக்கும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்குள் நுழையும் கதைப்போக்கு பாராட்டத்தக் கது. ஆனால், குதிரைப் பந்தயம் என்ற களத்தை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதற்குப் போதிய நியாயம் செய்யவில்லை. காதல் சமாச்சாரங்களுக்குச் செல விட்ட நேரத்தைக் குதிரைப் பந்தயத்துக்கும் அது தொடர் பான நுட்பங்களுக்கும் தந் திருந்தால் படத்தின் விறு விறுப்பு கூடியிருக்கும். மாறாக, உப்புச் சப்பற்ற காதல் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. அதிலும் பரத், சாந்தினி தொடர்பான காட்சிகள் எரிச் சலைக் கிளப்புகின்றன. கதிர், சஞ்சிதா தொடர்பான காட்சி கள் ஒப்பீட்டளவில் பரவா யில்லை.
இடைவேளைக்கு முந்தைய கட்டமும் கிளைமாக்ஸ் காட்சி யும் படத்தை ஓரளவு காப் பாற்றுகின்றன. கிளைமாக்ஸில் குதிரைப் பந்தயத்துடன் பல் வேறு பாத்திரங்களை ஊடாட விட்டிருக்கும் விதம் விறு விறுப்பு. நான்கு பாடல்கள் ரசிக்கும்படி இருந்தாலும் அவையே திரைக்கதைக்குத் தேவையில்லாத தடைகளாக இருக்கின்றன.
பரத், கதிர், சஞ்சிதா, சாந்தினி ஆகியோர் கச்சித மாகத் தங்கள் வேலையைச் செய்திருக்கிறார்கள். கதா நாயகிகள் இருவருக்கும் கதை யில் முக்கியத்துவம் இருக் கிறது. ராதாரவி சில காட்சி களே வந்தாலும் கம்பீரம் குறையாத தோரணையுடன் தனது கதாபாத்திரத்தை நிறுவிச் செல்கிறார்.
குதிரைப் பந்தயக் காட்சிகளை யதார்த்தமாக வும் விறுவிறுப்பாகவும் பட மாக்கியிருக்கிறார் ஒளிப் பதிவாளர் யுவா. ஏ.மோசஸ், சுதர்சன் எம்.குமார் ஆகிய இருவரது இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே கதைக்குத் தேவையான அளவில் உள்ளன.
திரையில் அதிகம் புழங் கப்படாத குதிரைப் பந்தய மைதானம் என்ற கதைக் களத்தை எடுத்துக்கொண்டு, அதில் விறுவிறுப்பான சம்பவங் கள் மூலம் விளையாடியிருக் கிறார் இயக்குநர். ஆனாலும் முதல் பாதியின் இழுவையும் காதல் காட்சிகள் தரும் அலுப்பும்தான் படத்தைப் பலவீனப்படுத்துகின்றன.
என்னோடு விளையாடு