

யு.டிவி நிறுவனத்தின் புதிய நிர்வாகியாக சித்தார்த் ராய் கபூர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தி திரையுலகில் பல்வேறு மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்து வரும் நிறுவனம் யு.டிவி. தயாரிப்பு மட்டுமன்றி பல்வேறு படங்களையும் வாங்கி வெளியிட்டு இருக்கிறது.
இந்தி திரையுலகினைத் தொடர்ந்து தமிழ், மலையாளம் ஆகியவற்றிலும் படங்களைத் தயாரித்து வருகிறது. மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் தயாரிப்பதை மூலம் தெலுங்கிலும் தனது தயாரிப்பு கணக்கைத் தொடங்குகிறது.
ஜுன் 2014 முதல் யு.டிவி நிறுவனத்தின் இந்திய பொறுப்பாளராக சித்தார்த் ராய் கபூர் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்நிறுவனத்தை ரோனி ஸ்குரூவாலா நிர்வகித்து வருகிறார். ஜனவரி 2014 முதல் சித்தார்த் ராய் கபூர் இந்திய நிர்வாக இயக்குநராக பணியாற்றுவார் என்றும் அவருக்கு ஜுன் 2014 வரை ரோனி ஸ்குரூவாலா ஆலோசனைகள் வழங்குவார் என்றும் அறிவித்து இருக்கிறது.
நடிகை வித்யா பாலனின் கணவர் தான் சித்தார்த் ராய் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.