கடும் தாமதம்: ஷாருக் கான் சந்திப்பைப் புறக்கணித்த சென்னை ஊடகங்கள்

கடும் தாமதம்: ஷாருக் கான் சந்திப்பைப் புறக்கணித்த சென்னை ஊடகங்கள்
Updated on
1 min read

பாலிவுட் சூப்பர் ஸ்டார் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மூன்றரை மணி நேரம் காத்திருந்த சென்னை பத்திரிகையாளர்கள் வெறுப்படைந்தும் எதிர்ப்புக்குரல்களை எழுப்பியும் வெளியேறினர்.

சென்னையில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு சென்னை ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 4.30 மணிக்கு ஷாருக் கான் தொடர்பான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

4.30 மணியிலிருந்து பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் ஷாருக் கானுக்காக காத்திருந்தனர். காத்திருந்து... காத்திருந்து பொறுமை இழந்தனர்.

ஆனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் இரவு 8 மணிக்கு வந்தார். விளம்பர நிகழ்ச்சி ஒன்றுடன் ஷாருக் கானின் அடுத்த படமான 'ஹேப்பி நியூ இயர்’ படத்தைப் பற்றிய அறிமுக சந்திப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு சென்னை ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்காக ஷாருக் கான் தவிர அந்தப் படத்தின் பிற கலைஞர்களும் சென்னை வந்திருந்தனர்.

4 மணி நேரமாகக் காத்திருந்ததால் கடும் ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பினர். ஷாருக் கான் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன் என்று உத்திரவாதம் அளித்தும் ஊடகவியலாளர்கள் விடுதியை விட்டு கோபமாக வெளியேறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in