

கேரளாவில் பிரபல கஜல் பாடகாரான நஜ்மல் பாபு காலமானார்.
கோழிக்கோடு மற்றும் மாலாபுரம் உள்ளிட்ட இடங்களில் இசைக்குழுவில் பாடி, அதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நஜ்மல் பாபு.
'தும் நஹி கம் நஹி' உள்ளிட்ட பல பிரபலமான கஜல் பாடல்களை பாடியிருக்கிறார். அவர் சில காலம், மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிவிட்டு பின்னர் தொழில்முறை பாடகராக விரும்பி இந்தியா திரும்பினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பல காலங்கள் பாடாமல் இருந்தார்.
கோழிக்கோட்டில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், செவ்வாய்கிழமை இரவு காலமானார்.
தொழில்முறையில் பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும், கஜல் பாடல்களை விரும்பும் கோழிக்கோட்டில் பிரபலமாகவே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.