கலக்கல் ஹாலிவுட்: திரையைத் தாக்கும் ரேஞ்சர்கள்!

கலக்கல் ஹாலிவுட்: திரையைத் தாக்கும் ரேஞ்சர்கள்!
Updated on
1 min read

ஹாலிவுட்டைக் கடந்து உலகம் முழுவதும் இளம் பார்வையாளர் மனங்களைக் கொள்ளையடித்த பிரபலமான தொலைக்காட்சித் தொடர் ‘பவர் ரேஞ்சர்ஸ்’. தற்போது வெள்ளித் திரையிலும் முழுநீளத் திரைப்படமாகப் புதிய அவதாரம் எடுத்திருக்கிறது இந்த சூப்பர் ஹீரோக்கள் படம்.

சாகசங்களும் விறுவிறுப்பும் நிறைந்த ‘பவர் ரேஞ்சர்ஸ்’ தொடரின் நாயகர்களான ரேஞ்சர்களின் வேலை, தீயவர்களையும் தீய சக்திகளையும் அழிப்பது. அதைப் போன்ற கதையம்சத்துடன் 120 மில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறதாம் திரைப்படம். வேற்றுக் கிரகவாசியால் பூமிக்கு ஆபத்து வருவதை ஐந்து டீன்ஏஜ் நண்பர்கள் உணருகிறார்கள். தங்களுக்கு உள்ள விசேஷ சக்தி மூலம் அந்த ஆபத்தைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். வேற்றுக் கிரகவாசியுடனான அவர்களது போராட்டத்தை திகில் சம்பவங்களையும் சாகசங்களையும் கலந்து சொல்ல வருகிறது ‘பவர் ரேஞ்சர்ஸ்’ திரைப்படம்.

பெக்கி (மஞ்சள் ரேஞ்சர்), டாக்ரி மோண்கோம்ரி (சிவப்பு ரேஞ்சர்), லூடி லின்( கறுப்பு ரேஞ்சர்), நாமி ஸ்காட் (இளம் சிவப்பு ரேஞ்சர்), சைலர் (ஊதா ரேஞ்சர்) ஆகிய ஐந்து புகழ்பெற்ற இளம் நடிகர்களே திரைப்படங்களிலும் பவர் ரேஞ்சர்களாக நடித்திருக்கிறார்கள். படத்தை டீன் இஸ்ரேலிட் விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார். இசை பிரெயின் டெய்லர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in