

சென்னையிலிருந்து
மதுரைக் குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸின் ஏ.சி. வகுப் புப் பெட்டியில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொல் லப்படுகிறார்கள். இன்னொரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது. கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரயில்வே புலன் விசாரணை அதி காரியான ஆர்.கே.விடம் ஒப் படைக்கப்படுகிறது. கொலைகள் நடந்த பெட்டியில் பயணம் செய்த தீவிரவாதியைக் (ஆர்.கே. செல்வ மணி) கைதுசெய்து விசாரணை யைத் தொடங்கும் ஆர்.கே.வால் தனது குழுவின் உதவியுடன் குற்ற வாளியை நெருங்க முடிந்ததா, இல்லையா என்பதுதான் கதை.
கொலை செய்யப்பட்ட பெண்களின் குடும்பப் பின்னணி, அவர்களைச் சுற்றி நிகழும் பிரச் சினைகள், அவற்றின் வழி எழும் கொலைக்கான நோக்கம், கொலைகளைச் செய்தது ஒரு வரா, இருவரா அல்லது பலரா என எழும் கேள்விகளுக்கெல்லாம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டி ருக்கும் காட்சிகள் வழியே விறு விறுப்பாகப் பதில் சொல்லிச் செல் கிறார் இயக்குநர் ஷாஜி கைலாஸ்.
கதையில் நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள். பத்துக்கும் அதிகமான துணைக் கதாபாத் திரங்கள். அத்தனைக்கும் நியா யம் செய்து ஆச்சரியப்படுத்தி யிருக்கிறார் இயக்குநர்.
இயக்குநர் ஷாஜியின் திரைக் கதையும் வீ. பிரபாகரின் வசனமும் கதைக்கு மிகப் பெரிய பலம். “சட்டசபையவே சட்ட பாக் கெட்ல வெச்சிருந்தவங்ககூட சட்டத்தோட பிடியிலிருந்து தப் பிச்சதில்ல” என்பது போன்ற கூர்மையான வசனங்கள் ஆர்.கே. யின் பாத்திரத்துக்கு ரசிக்கும் படியான ஹீரோயிசத்தைக் கூட்டி விடுகின்றன.
ரயிலின் உள்ளே குறுகலான இடங்களில் நடக்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த விதத் தில் அசரவைக்கிறார் கனல் கண்ணன். ஒளிப்பதிவாளர் சஞ்சீவ் சங்கர் முதல் பாதி முழுவதும் நிதானம் காட்டியிருக்கிறார். புல னாய்வு தீவிரமடையும் இரண்டாம் பாதியில் சில காட்சிகளை மிகைப் படுத்தப்பட்ட கோணங்களில் காட்டுவதன் அவசியம் கதை யோடு தொடர்புடையது என்றா லும் சில இடங்களில் இது அள வுக்கு அதிகமாகி, எரிச்சலூட்டு கிறது. பாராட்டப்பட வேண்டிய மற்றொரு அம்சம் படத்தொகுப்பு. குற்றவாளியை நெருங்கும் சமயத் தில் விறுவிறுப்பான படத் தொகுப்பால் சட்டென்று முடிந்துவிடுகிறது படம். ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வராமல் வாய்ப்பிருக்கும் எல்லாக் கோணங்களிலும் விசார ணையை எடுத்துச் செல்வது நன்று.
சந்தேகம் உறுதிப்படும்வரை சாந்தமாகவும் அதன் பிறகு சாதுரியம் மிகுந்த சீற்றத்துடனும் விசாரணை செய்யும் ஆர்.கே.யின் நடிப்பு ஓகே. ஆனால் வசன உச்சரிப்பில் அவர் இன்னும் தேற வேண்டும்.
இரட்டை வேடம் ஏற்றுள்ள நீத்து சந்திரா, கதாபாத்திரங்களின் வேறுபாட்டைச் சிறப்பாக வெளிப் படுத்தி முத்திரை பதித்து விடுகிறார்.
'எல்லாம் அவன் செயல்’ ‘என் வழி தனி வழி’ படங்களைத் தொடர்ந்து, மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் நடிகர் ஆர்.கே. கூட்டணி, விறுவிறுப்பான த்ரில்லர் தருவதில் இந்த முறையும் தேறியுள்ளது.