Last Updated : 21 Mar, 2014 12:00 AM

 

Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM

திரையிசை: ஜிகிர்தண்டா

பீட்சாவில் ஹிட்டான கார்த்திக் சுப்புராஜ் - சந்தோஷ் நாராயணன் ஜோடி மீண்டும் ஜிகிர்தண்டாவில் சேர்ந்திருக்கிறது. சமீபகாலத்தில் கவனிக்கப் படும் இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். மாறுபட்ட பாடல்களைத் தருவது மட்டுமில்லாமல், பின்னணி இசையிலும் முத்திரை பதித்து வருகிறார்.

பீட்சாவிலிருந்து இந்தப் படத்தின் கதையும் பின்னணியும் மாறுபட்டது என்பதால், பாடல்கள் மாறுபட்டிருக்கின்றன. எல்லாமே குட்டி குட்டி பாடல்கள். குக்கூவில் பாடிய நாட்டுப்புறப் பாடகர் ஆண்டனிதாசன் இந்தப் படத்திலும் பங்களித்திருக்கிறார்.

காடூர் செல்வா பாண்ட் இசையில் ஆண்டனிதாசன் எழுதிப் பாடியுள்ள ‘பாண்டிநாட்டுக் கொடி’, அதிரடி அமர்க்களம். பாடல் மட்டுமில்லாமல், பின்னணி இசையும் பட்டையைக் கிளப்புகிறது.

சந்தோஷ் நாராயணனே பாடியுள்ள கேலித்தன்மையுடன் அமைந்துள்ள ‘பேபி’ பாடல், நிச்சயம் மாறுபட்ட ஒன்றாக இருக்கும். காட்சிகளுடன் சேரும்போது ஜாலியாக இருக்குமெனத் தோன்றுகிறது.

நாட்டுப்புறப் பாணியில் அமைந்துள்ள முதல் பாடல், ‘கண்ணம்மா, கண்ணம்மா’ சட்டென்று கேட்டவுடன் சட்டென்று பிடித்துப் போகவில்லை, வித்தியாசமாக இருப்பதன் காரணமாகக் காட்சிகளுடன் பார்க்கும்போது ஹிட்டாகலாம். பாடியிருப்பவர்கள் ரிதா, ஆண்டனிதாசன்.

‘தெசையும் இழந்தேனே’ பாடலைப் பாடியுள்ள மீனாட்சியின் குரலில், சமீபகாலமாக மாறுபட்ட அடையாளத்தைப் பெற்று வரும் வைக்கம் விஜயலட்சுமியின் சாயலைப் பார்க்க முடிகிறது.

ஆடியோவின் பின் பகுதியில் உள்ள 4 கருவியிசை துக்கடாக் கள், பின்னணி இசையிலும் சந்தோஷால் நன்றாக ஸ்கோர் பண்ண முடியும் என்பதற்கான வலுவான அடையாளம்.

மாறுபட்ட ஆடியோவாக இருக்கும் ஜிகிர்தண்டாவின் பாடல்களில், கேலிக்குரிய பாணியில் குரலை மாற்றி பாடுவது எதிர்பார்த்த விளைவைத் தருமா என்பது புரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x