டிவிட்டர் வலை

டிவிட்டர் வலை
Updated on
1 min read

10 லட்சத்தைக் கடந்த தனுஷ்

கடந்த வாரம் ட்விட்டர் வலைத்தளத்தில் தன்னைப் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையில் 10 லட்சத்தைத் தாண்டினார் தனுஷ். தென்னிந்திய நடிகர்களில் ரஜினி 9 லட்சத்தில் இருக்கும் நிலையில், தனுஷ் அவரை முந்தி 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறார். அவருக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சித்தார்த் உள்ளிட்ட சிலர் 10 லட்சத்தைக் கடந்திருக்கிறார்கள். வைரஸ்கள் இருக்கும் இணைய தளத்திற்குப் பயனர்களை வரவழைக்க, இணையத்தில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளின் பெயர்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில், நடப்பு 2014-ல் நடிகர் தனுஷின் பெயர் அப்படி அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மெக்கஃபே நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. தென்னிந்தியக் கதாநாயகிகளில் த்ரிஷாவைத் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பத்து லட்சத்தைக் கடந்தது.

தலைப்பு Vs டிரெய்லர்

எப்போது இணையத்தில் அஜித் - விஜய் ரசிகர்களுக்குப் பொழுதுபோகவில்லையோ அப்போது தங்களது ஹீரோவை முன்னிலைப்படுத்தி ஹேஷ் டேக் ஒன்றைத் தயார் செய்து டிரெண்ட் செய்வார்கள். அந்த வகையில் கடந்த வாரம் ‘கத்தி' ட்ரெய்லருக்காகக் காத்திருக்கிறோம் என்று விஜய் ரசிகர்களும், படத் தலைப்புக்காகக் காத்திருக்கிறோம் என்று அஜித் ரசிகர்களும் கெத்து காட்டினார்கள். #IamWaiting4KATHTHITrailer மற்றும் #Awaiting4Thala55Title என்ற இரண்டு ஹேஷ் டேக்குகள் டிரெண்டாயின.

சிக்கிக் கொண்ட யான்

படம் ஆரம்பிக்கும் முன்பே, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுதிவிடு கிறார்கள் என்று சூர்யா ‘அஞ்சான்' படத்தின் வெளியீட்டின்போது கூறினார். ஆனால், அவரது தம்பி கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்' படத்திற்கு அனைவருமே அருமையான படம் என்று ட்விட்டர் விமர்சனம் அளித்தார்கள். ‘அஞ்சான்' படத்திற்குப் பிறகு ட்விட்டர் தளத்தில் ரசிகர்களிடம் எக்கச்சக்கமாகக் கும்மாங்குத்து வாங்கியது ரவி.கே. சந்திரன் இயக்கிய யான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in