மும்பை பட விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

மும்பை பட விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
Updated on
1 min read

மும்பை திரைப்பட விழாவில், நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

15-வது மும்பை திரைப்பட் விழா அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் என்னென்ன விருது, யாருக்கு கொடுக்க இருக்கிறார்கள் என்பதனை அறிவித்துள்ளனர்.

அதில், வாழ்நாள் சாதனையாளர் விருதினை நடிகர் கமல்ஹாசனுக்கும், பிரெஞ்ச் இயக்குநர் கொஸ்தா கேவ்ராஸ் என்பவருக்கும் அளித்து கெளரவிக்க இருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி மறைந்த தயாரிப்பாளார் மற்றும் இயக்குநர் யாஷ் சோப்ரா, ரிதுபர்னா கோஷ் மற்றும் பலபெரும் நடிகர் ப்ரான் ஆகியோருக்கும் மரியாதை செலுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'The Rocket', 'The Face of Love', 'Barefoot to Goa', 'Mohan Kaka', 'Red Monsoon' and 'Good Morning Karachi' உள்ளிட்ட சுமார் 200 திரைப்படங்கள் திரையிடவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

இவ்விழாவின் சிறப்பம்சமாக ஸ்பெயின், கம்போடியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் திரைப்படங்களும் பங்கேற்க இருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in