திரை விமர்சனம்: கவண்

திரை விமர்சனம்: கவண்
Updated on
2 min read

ஊடக அறத்தையும் உண்மையையும் முக் கியமாக நினைக்கும் இளைஞனுக்கும் தரக்குறைவான சித்து விளையாட்டுகளால் ஊடக நிறுவனத்தை வளர்க்க விரும்பும் முதலாளிக்கும் நடக்கும் மோதல் தான் ‘கவண்’.

முன்னணித் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் திலக் (விஜய் சேதுபதி) ஊடக அறத்தோடு செய்திகளை வழங்குகிறார். ஆனால், முதலாளி கல்யாண் (அகாஷ்தீப் சைகல்) அந்தச் செய்திகளைப் பல வாறாகத் திரித்துப் பயன் படுத்திக்கொள்கிறார். அரசியல் வாதி தீரன் மணியரசுவின் (போஸ் வெங்கட்) தொழிற்சாலைக் கழி வால் ஏற்படும் மோசமான பாதிப்பு களுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தையும் தொலைக் காட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. போஸ் வெங்கட்டின் மதிப்பைத் தொலைக்காட்சி மூலம் கூட்டு வதற்கான ஒப்பந்தத்தையும் போட்டுக்கொள்கிறது.

இதையெல்லாம் எதிர்த்து வெளியேறும் விஜய் சேதுபதி யும் அவரது நண்பர்களும் ஊடக முதலாளியின் முகத் திரையைக் கிழிக்க என்ன செய்கிறார்கள் என்பதே மீதிக் கதை.

காட்சி ஊடகத்தின் பின்னே இருக்கும் கார்ப்பரேட் - அரசியல் கூட்டுச் சதியை அழுத்தமாகக் காட்டுவதற்காக கே.வி.ஆனந் தைப் பாராட்டலாம். ரியாலிட்டி ஷோக்களில் நடைபெறும் மலின மான நாடகங்களையும் கூத்து களையும் அம்பலப்படுத்துகிறார். பிரேக்கிங் நியூஸுக்கான தவிப் பும், பரபரப்புப் பசியும் தொலைக் காட்சிகளின் அணுகுமுறை களைப் பாதிப்பதைத் தோலுரித் துக் காட்ட முனைந்திருக்கிறார். போராட்டத்தையோ அரசியல் வாதியையோ மகிமைப்படுத் தவோ, கொச்சைப்படுத்தவோ ஊடகங்களால் முடியும் என் பதையும் காட்டுகிறார்.

ஆனந்த், கபிலன் வைரமுத்து, சுபா ஆகியோர் இணைந்து எழுதி யுள்ள திரைக்கதையும் வசனங் களும் ஊடகங்களின் செயல்பாடு களை நுட்பமாகக் காட்டுவ தோடு அவற்றின் இருண்ட முகங் களையும் அம்பலப்படுத்து கின்றன. இசை நிகழ்ச்சியில் நடக்கும் கூத்துக்களும் போராட்டக் குழுவில் இருக்கும் பெண்ணின் பேச்சைப் பயன்படுத்திய விதமும் இந்த அம்சத்தைச் சரியாகக் கையாள்கின்றன. ஆனால், பல காட்சிகள் மிகையான அழுத்தம் காரணமாகப் பலவீனமாக இருக் கின்றன. உதாரணமாக, போஸ் வெங்கட்டின் நேர்காணல். மிகத் தீவிரமாக அமைந்திருக்க வேண் டிய இந்தக் காட்சி கேலிக் கூத்தாகிவிடுகிறது. அரசியல்வாதி யின் புகழைக் கூட்டுவதற்காகவே ஏற்பாடு செய்யப்படும் நேர் காணலை நேரலையாக ஒளிபரப்ப யாரும் திட்டமிட மாட்டார்கள்.

டி.ஆர்.பி-க்கான போட்டியில், ஊடக அறம் மறக்கப்படுவதைச் சொல்வதற்குப் பதிலாக, ஊடகத் தில் இருப்பவர்களே அரசியல் வாதியுடன் சேர்ந்துகொண்டு வெடிகுண்டு வைத்து, செய்தி களை உருவாக்குகிறார்கள் என்று காட்டுவதெலாம் சுத்த அபத்தம். சுற்றுச்சூழல் போராட்டம், தீவிர வாதியாகச் சித்தரிக்கப்படும் இஸ்லாமிய இளைஞன் படும் கஷ்டங்கள் எனப் பல முக்கியமான பிரச்சினைகள் ஊறுகாய்போலப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊட கங்களின் விபரீதப் போக்கை அம்பலப்படுத்த இத்தனை விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமா? திரைக் கதை என்னும் வண்டியில் எவ்வளவு மூட்டையைத்தான் ஏற்றுவீர்கள்?

காட்டில் நடக்கும் காட்சிகளைத் தூரத்திலிருந்து துல்லியமாகப் படம் பிடிப்பது, பெரியதொரு ஊடக நிறுவனத்தில் ஓரிருவர் உட்கார்ந்துகொண்டு தங்கள் இஷ்டத்துக்குச் செய்திகளை மாற்றிக் காட்டுவது போன்ற காட்சி களில் லாஜிக் இல்லை. இழுத் துக்கொண்டேபோகும் கிளை மாக்ஸ் காட்சிகளும் சலிப்பை வரவழைக்கின்றன. இத்தனை களேபரங்கள் நடக்கும்போது தமிழ்நாட்டில் இரண்டு டி.வி சேனல்களைத் தவிர வேறு எந்த ஊடகமும் இல்லாததுபோலவும் மாற்றுச் செய்திகளுக்கான வழி களே இல்லை என்பதுபோலவும் அமைந்திருக்கும் சித்தரிப்பும் திரைக்கதையைப் பலவீனப் படுத்துகிறது

ஊடக அறத்தை வெளிப் படுத்தும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பிரகாசிக்கிறார். கை விட்டுப் போகும் காதலை மீண்டும் பெற முயற்சிப்பது, தார்மீக ஆவேசம் கொள்வது, ஆற்றாமையால் துடிப்பது, அலட்டிக்கொள்ளாமல் செயல் படுவது என எல்லா அம்சங்களிலும் அக்மார்க் நடிப்பைத் தந்திருக் கிறார். பாராமுகமாக இருக்கும் காதலியின் பாராட்டைப் பெற ஏங்குவதையும், அது கிடைக் கும்போது அடையும் நிறைவை யும் மிக நுட்பமாக வெளிப் படுத்துகிறார். இயல்பான பேச்சு, உடல்மொழி என அவரது நடிப்பு எப்போதும்போல சிறப்பு.

மடோனா செபாஸ்டியன் நிறை வான பங்களிப்பை வழங்கி யிருக்கிறார். கோபப்படும் போதும், விஜய் சேதுபதிக்கு அறிவுரை சொல்லும்போதும் அவர் நடிப்பு யதார்த்தம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய திரையில் முகம் காட்டியிருக்கும் டி.ராஜேந்தர் வழக்கமான தன் னுடைய பாணியில் பேசி நடித்திருக்கிறார். சில காட்சிகள் எடுபடுகின்றன. ஆகாஷ்தீப்பின் நடிப்பு கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் ஒரே மாதிரி இருக்கிறது. பாண்டியராஜன், ஜெகன், விக்ராந்த், போஸ் வெங்கட், பவர் ஸ்டார் சீனிவாசன், நாசர், தர்ஷனா ராஜேந்திரன், கிருஷ்ணா ஆகியோர் தத்தமது பாத்திரங்களில் நன்கு பொருந்து கிறார்கள்.

தொலைக்காட்சி நிறுவ னத்தை அபிநந்தன் ராமா னுஜத்தின் கேமரா அழகாகக் காட்டியிருக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையில், கண்ணம்மா ராக் பாடல் மட்டும் கவர்கிறது.

கவணின் இலக்கு (ஊடகங் களின் தவறான போக்கை அம்பலப்படுத்துவது) தெளிவாகத் தான் இருக்கிறது. ஆனால், வழியில் எக்கச்சக்கமான விஷயங் களை இழுத்துப் போட்டுக் கொண்டதால் குறி தவறி விட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in