

நாணயம் படத்துக்குப் பிறகு சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. இந்தப் படத்தில் சிபிதான் கதாநாயகன் என்றாலும் படத்தின் இன்னொரு ‘கதாநாயக’னாகச் சிபியுடன் இணைந்து நடித்திருக்கும் பெல்ஜியம் ஷெப்பர்ட் வகை நாயைப் பற்றிப் படக் குழுவில் கதைகதையாகச் சொல்கிறார்கள்.
அதாவது படத்தில் மாஸ் ஹீரோவுக்கு இணையாக நாய்க்கு அறிமுகப் பாடல் உண்டு. பெங்களூரைச் சேர்ந்த இந்த நாய் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 40 நாட்களும், இதற்குத் தனி ஏசி கேராவன் கொடுத்துத் தங்க வைத்திருக்கிறார்கள்.
நெருங்கிய நண்பனாகிவிட்ட இந்த நாய்க்குத் தான் ஃபேனாகிவிட்டதாகச் சொல்கிறார். படப்பிடிப்பில் தனது நாய் நண்பனின் தோள் மீது கைபோட்டபடி சிபிராஜ்.