

அறுபதுகளில் புகழ்பெற்ற தென்னிந்தியக் கதாநாயகிகளில் ஒருவர் ராஜசுலோச்சனா. கடந்த ஆண்டு தனது 77 வயதில் சென்னையில் மறைந்தார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த இவர் 1961-ல் வெளியான ‘நல்லவன் வாழ்வான்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி.
அண்ணா கதை, வசனத்தில் பி. நீலகண்டன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகி ராஜசுலோச்சனாவுக்கு கிளாப் அடிக்க வேண்டும் என்றொரு ஆசை.
எம்.ஜி.ஆர். நடித்த ஒரு ஷாட்டுக்குக் கிளாப் அடிக்கக் கற்றுக்கொடுத்தார் இயக்குநர். ஒருமுறைதான் மிகச் சரியாக அவர் கிளாப் அடித்தார். கிளாப் அடிக்கும் முன்பு எம்.ஜி.ஆர் வியப்பதைப் புகைப்படக்காரர் க்ளிக்கிவிட்டார்.