சென்னையில் ‘ஸ்பைடர்மேன்’: குழந்தைகளுடன் கொண்டாட்டம் - ‘தி இந்து’ அலுவலகத்தில் நடைபெற்றது

சென்னையில் ‘ஸ்பைடர்மேன்’: குழந்தைகளுடன் கொண்டாட்டம் - ‘தி இந்து’ அலுவலகத்தில் நடைபெற்றது
Updated on
1 min read

உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகள் ஆவலோடு எதிர் பார்த்துக் காத்திருக்கும் அமேஸிங் ஸ்பைடர்மேன் சென்னைக்கு வந்தார் என்றால் நம்புவீர்களா? ‘ஸ்பைடர்மேன்’ சென்னைக்கு வந்ததோடு மட்டுமல்ல... குழந்தைகளோடு ஆடிப் பாடி மகிழ்வித்து அவர்களுக்குப் பரிசும் கொடுத்துவிட்டுப் போனார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி களில் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘தி அமேஸிங் ஸ்பைடர் மேன் 2’ படத்துக்கான சிறப்பு முன்னோட்ட நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின் மெண்ட் சார்பில் ரிலீஸாகும் இந்தப் படத்தில் தோன்றும் ஸ்பைடர்மேனின் உடைகளை அமெரிக்காவிலிருந்து இந்தி யாவிற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். சாகச வீரர் ஒருவர் அதை அணிந்தபடி ‘தி இந்து’ அலுவலகத்தில் குழந்தைகள் முன்பு வீர தீர சாகசங்கள் புரிந்தார்.

குழந்தைகள் ஸ்பைடர்மேனை நேரில் பார்த்து பரவசத்துக்கு ஆளானார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்குப் பரிசுகள் கொடுத்து ‘ஸ்பைடர் மேன்’ சந்தோஷப்படுத்தினார்.

புதன்கிழமை மாலை சென்னை ஃபோரெம் விஜயா மாலில் குழந்தைகள், இளைஞர்கள் முன்பு இந்த அசத்தலான சாகச நிகழ்ச்சி மீண்டும் அரங்கேறியது.

‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன் புதன்கிழமைதோறும் வெளியாகும் ‘மாயாபஜார்’ இணைப்பை படித்து ரசிக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தை களுக்காக பிரத்யேகமாக ஒரு ‘க்விஸ்’ நிகழ்ச்சியும் நடத்துகிறார் ஸ்பைடர் மேன். இதுதொடர்பான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

படங்கள்: ம.பிரபு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in