ஹாலிவுட் ஜன்னல்: அழகியைத் தேடி…

ஹாலிவுட் ஜன்னல்: அழகியைத் தேடி…
Updated on
1 min read

திடீரென மாயமாகிறார் பக்கத்து வீட்டு இளம்பெண். அவளைத் தேடும் முயற்சியில் ஓர் இளைஞன் எதிர்கொள்ளும் மர்மங்களும் அதற்கான விடைகளுமே ’அன்டர் த சில்வர் லேக்’ திரைப்படம்.

சாம் என்ற இளைஞன் தனது குடியிருப்பு வளாக நீச்சல்குளத்தில் தரிசனம் தரும் இளம் பெண் மீது மையல் கொள்கிறான். அவள் வசிப்பது தனது வீட்டின் அருகில்தான் என்பதை அறிந்ததும் குதூகலம் அடைகிறான். ஆனால், அவளுடனான முதல் சந்திப்பு நிகழ்ந்த வேகத்தில் திடீரென மாயமாகிறாள். அவள் மீதான ஈர்ப்பில் தனக்குப் பரிச்சயமில்லாத துப்பறிவாளனாக சாம் கிளம்புகிறான்.

அவனது தேடல், அந்த நகரின் மர்மங்கள் பலவற்றையும் வெளிப்படுத்துகிறது. கான்கிரீட் காட்டுக்குள் நிழலாக இயங்கும் இன்னொரு உலகமும் அதன் பின்னணியில் செயல்படும் செல்வந்தர்கள், பிரபலப் புள்ளிகளின் அதிர்ச்சிகரமான கலாச்சரமும் வெளிப்படுகிறது. அவனும் அவனது தேடலும் என்னவாயிற்று, அந்தப் பெண் கிடைத்தாளா, நிழல் உலகத்தின் ‘கலகல’ மர்மங்கள் என்ன என்பதே மிச்சத் திரைப்படம்.

ஒரு க்ரைம் திரைப்படத்தை ’நியோ-நாய்ர்’ பாணியில் காமெடி கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள். நீச்சலுடையும் வசீகரிக்கும் அழகுப் பதுமையுமாக ரைலி கியோ (Riley keough) தோன்ற, அவரைத் தேடும் இளைஞனாக ஆன்ட்ரூ கார்ஃபீல்ட் (Andrew Garfield) மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். டேவிட் ராபர்ட் மிட்செல் எழுதி இயக்கியுள்ளார். பலமுறை தள்ளிப்போன ‘அன்டர் த சில்வர் லேக்’ டிசம்பர் 7 அன்று வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in