

தன் நடிப்புத் திறமையால் ‘வெர்சடைல் மாஸ் ஹீரோ’வாகத் தன்னைத் தக்கவைத்திருப்பவர் சியான் விக்ரம். தற்போது அவரின் மகன் துருவ், ‘பைசன்’ படத்தின் வெற்றியால் ‘நடிப்பில் குட்டி விக்ரம்’ என்று பெயர் பெற்றிருக்கிறார்.
‘அப்பாவின் வழியில் நடிகனாகும் ஆசை இல்லை, படங்களை இயக் கவே லண்டனில் பிலிம் மேக்கிங்’ படித்துத் திரும்பினேன்’ என்று அவர் தொடக்கத்தில் பேட்டி கொடுத்தாலும், கோடம்பாக்கத்தின் ‘நெப்போட்டிசம்’ அவரை நடிப்பின் பக்கம் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.