

கடந்த நவம்பரில் வெளியான ‘ஜோ’ படத்தில் நடித்திருந்த ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடியின் திரைவெளி இணக்கம் ரசிகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது. தற்போது ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் மூலம் அந்த ஜோடியை மீண்டும் இணைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல். படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து...
திருமண முறிவு என்று வரும்போது, அதில் ஆண்களின் தரப்பைப் படமாக்க வேண்டும் என ஏன் நினைத்தீர்கள்? - திருமணம் ஆன அனைவரும் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் ஒரு கதைக் களத்தில் முதல் படம் செய்யலாம் என முடிவுசெய்தேன். தற்காலத்தில் தாறுமாறாக அதிகரித் திருக்கும் திருமண முறிவுதான் எனது கண் முன் தெரிந்தது. திரைக்கதை எழுதும் முன் கடந்த 15 ஆண்டுகளில் ‘டைவர்ஸ்’ பெற்ற நூற்றுக்கும் அதிகமான வழக்குகளின் கோப்புகளை வாங்கிப் படித்தோம்.