

இயக்குநர் பீட்டர் பெர்க் எடுத்த ‘வெரி பேட் திங்ஸ்’ (Very Bad Things) என்கிற படம் ஹாலிவுட்டில் 1998இல் வெளியானது. இதுவொரு ‘டார்க் ஹியூமர்’ படம். கதையின் கரு மிக எளிமையானது. கைல் என்பவனும் லாரா என்கிற பெண்ணும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர்.
அப்போது கைல், தன்னுடைய நான்கு நண்பர்களுடன் லாஸ் வேகாஸ் நகரத்துக்குச் சென்று, திருமணத்துக்கு முன்னர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி ‘பேச்சிலர் பார்ட்டி’ ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறான். அந்த பார்ட்டியில் ஆடுவதற்கு ஒரு பெண் வருகிறாள் (Stripper). எதேச்சையாக அந்தப் பெண் அங்கே கொல்லப்பட்டுவிடுகிறாள் (காரணத்தைப் படத்தில் காண்க). இப்போது, அந்தப் பெண் ணின் சடலத்தை மறைக்கவேண்டிய சூழல்.