

திரைக்கதையில் மாறுபட்ட கோணங்களைக் கையாண்ட படங்கள் தமிழில் பலமுறை வெற்றியடைந்துள்ளன. 1998இல் பீட்டர் ஹோவிட்டின் இயக்கத்தில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம் ‘ஸ்லைடிங் டோர்ஸ்’ (Sliding Doors). இது, ஹெலன் என்கிற பெண்ணின் கதையை மாறுபட்ட திரைக்கதைக் கோணத்தில் சொன்னது. லண்டன் மாநகரத்துப் பெண் ஹெலன். மெட்ரோ ரயிலைப் பிடிக்க அவசரஅவசரமாக ஓடுகிறாள். அவள் ஏறுவதற்குள் ரயிலின் தானியங்கிக் கதவுகள் மூடிக்கொள்ள, வண்டியைத் தவறவிட்டுவிடுகிறாள்.
ஒருவேளை அந்த மெட்ரோ ரயிலில் அவள் ஏறியிருந்தால் என்னவாகும்? இந்த இரண்டுகதைகளையும் மாறிமாறி காட்டிக்கொண்டே வருவார் இயக்குநர். கதையைவிடவும், அதன் திரைக்கதை உத்தியால் இப்படம் பெரிதும் பேசப்பட்டது. ஹெலன் மெட்ரோவைத் தவற விடாமல் ஏறியிருந்தால் என்கிற விவரிப்பில், வீட்டுக்குச் சீக்கிரம் செல்கிறாள்.