

முப்பரிமாண அனிமேட்டர், விளம்பரப்படங்களின் எடிட்டர், பிரபலங்களின் ஒளிப்படக் கலைஞர் என மூன்று துறைகளில் 30 ஆண்டுகள் அனுபவத்துடன் ‘அதர்ஸ்’ திரைப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் அபின் ஹரிஹரன். குறும்படங்களின் வழியே அறியப்பட்டிருக்கும் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், கௌரி கிஷண், அஞ்சு குரியன் என இரண்டு முன்னணிக் கதாநாயகிகள். படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருக்கும் நிலையில், இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
இதுவொரு ‘மெடிக்கல் கிரைம்’ கதைக் களம் என்பதைப் படத்தின் டீசர் சொல்கிறது. இக்கதைக்கான தாக்கம் எங்கிருந்து கிடைத்தது?