

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியான தீபாவளிகள் இப்போது டிரெண்ட் கிடையாது. நட்சத்திர அந்தஸ்தை எட்டிய இயக்குநர்களின் படங்கள், 2கே, ஜென் இசட் தலைமுறைப் பார்வையாளர்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட்ட புதிய கதாநாயகர்கள், கதாநாயகிகள் நடித்துள்ள படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதால் நிலைமை மாறிவிட்டது.
இதுபோன்ற படங்களின் தலைப்புகளில் தமிழ் அடியோடு புறக்கணிக்கப்படுகிறது. தீபாவளியை ஒட்டி இன்று வெளியாகும் ‘பைசன்’, ‘டீசல்’, ‘டியூட்’, ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ ஆகிய நான்கு படங்களின் தலைப்புகளும் ஆங்கிலத்தில் உள்ளன.