

சினிமாவுக்கு நடிக்கப் போன இலக்கியவாதிகள் எல்லாரும் முத்திரை பதிப்ப தில்லை. ‘அருவி’ படப் புகழ் அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிபெற்றுள்ள படம் ‘சக்தித் திருமகன்’. அதில் ‘செல்வம்’ என்கிற சின்ன கதாபாத்திரத்தில் வரும் கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்ரமணியம், தன்னுடைய நடிப்புக்காக விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டு களைப் பெற்று வருகிறார். அவருடன் ஒரு மினி பேட்டி:
இலக்கியவாதிகள் சினிமாவில் எழுதிப் பெறும் வெற்றிகளுக்கு இணையாகத் தற்போது நடிப்பிலும் களம் காணத் தொடங்கி விட்டார்கள்..!