

விஜய் ஆண்டனி, விக்ரம், ஜி.வி.பிரகாஷ், தனுஷ் தொடங்கி தற்போது சிவகார்த்தி கேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மதராஸி’ வரை கவனம் ஈர்க்கும் துணைக் கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்துவருகிறார் சித்தார்த்தா சங்கர்.
‘தி கோட்' படத்தின், இறுதிக் காட்சியில் விஜய் தனது கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டுச் செல்வார். ‘மதராஸி’ படத்திலோ சிவகார்த்திகேயன், தன் கையில் இருக்கும் துப்பாக்கியை சித்தார்த்தாவிடம் கொடுப்பார். நடிகர் நாசரிடம் நடிப்புப் பயிற்சி பெற்று நடிக்க வந்திருக்கும் அவருடன் ஒரு மினி பேட்டி: