

கடந்த 2015இல் தொடங்கி, ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே..!’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’, ‘கள்வன்’ என வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் பட நிறுவனம் அக்சஸ் பிலிம் ஃபேக்டரி. அதை நிறுவிய தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு.
அவருடைய ஒவ்வொரு படத்தின் நிர்வாகத் தயாரிப்பு, புரொடெக்ஷன் டிசைன், கேஸ்டிங், காஸ்ட் கட்டிங் எனத் தயாரிப்பின் அனைத்து முனைகளிலும் அவருக்கு வலதுகரமாக நின்றவர் டில்லிபாபுவின் அக்கா மகன் தேவ். தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பாளர் என்கிற நிலையிலிருந்து ‘யோலோ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி: