

ஓர் ஒளிப்பதிவாளராக, புத்தாயிரத்தின் இந்தி சினிமாவில் அனுராக் காஷ்யப் இயக்கிய படங்களை ஒளிப் பதிவு செய்யத் தொடங்கி, பாலிவுட்டில் ‘மோஸ்ட் வான்டட்’ ஒளிப்பதிவாளராக வெற்றிக்கொடி நாட்டியவர் நட்டி என அழைக்கப்படும் நட்ராஜ் சுப்ரமணியம்.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதி வாளர், நடிகர் என அழுந்தத் தன் பன்முக முத்திரையைப் பதித்து வரும் இவர், சுப்ரமணியம் ரமேஷ்குமார் எழுத்து, இயக் கத்தில் உருவாகியிருக்கும் ‘ரைட்’ என்கிற புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் வெளியிடப்பட விருக்கும் படத்தின் டீசரை நமக்குக்காட்டிய அவருடன் உரையாடியதி லிருந்து ஒரு பகுதி: